புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 பிப்., 2014

மதவாதத்தை எதிர்ப்பவர்கள் தி.மு.க, கூட்டணிக்கு வருவார்கள்: கலைஞர் பேச்சு
 திமுகவின் 10வது மாநில மாநாடு திருச்சியில் நடைபெற்றது. இரண்டாவது நாளானஞாயிற்றுக்கிழமை திமுக தலைவர் கலைஞர் பேசுகையில்,
முக்கியமான நேரத்தில் மாநாடு நடைபெற்றுள்ளது.
இந்த மாநாட்டிற்கு பின் நாடாளுமன்றத் தேர்தல் என்ற முக்கிய பணி நமக்கு உள்ளது.

தமிழகத்தில் நடப்பது, 110 அறிக்கைகள், அச்சத்தின் பிடியில் பத்திரிகைகள் அனைத்து பிரிவினரிடையும் சலிப்பு ஆக்கப்பூர்வமான திட்டங்கள் ஏதுமில்லை. நடப்பதெல்லாம் திராவிட லட்சியங்களுக்கு எதிரான காரியங்கள், தி.மு.க, ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களுக்கு மூடுவிழா, மத்திய அரசின் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை, அரசியல் தரத்தை தாழ்த்தி குற்றச்சாட்டு, ஜனநாயக விரோத ஆட்சி தமிழத்தில் நடைபெறுகிறது. இங்கு நடைபெறுவது ஆட்சி அல்ல. காணொளி காட்சி. இதை எத்தனை நாள் அனுமதிக்கப்போகிறோம் என்பது தான் கேள்வி.
அதிமுக ஆட்சிக்கு வந்தால் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவோம் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறியிருக்கிறார்கள். ஆனால் இப்போது அண்ணாவின் கனவு திட்டமான சேது சமுத்திர திட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்திற்கு செல்கிறார்கள். 
காவிரி வழக்கில் முதல்வர் ஜெயலலிதா இரட்டைவேடம் போடுகிறார். தென் மாவட்டங்களின் வளர்ச்சிக்கு ஜெயலலிதா போடுவது இரட்டை வேடம். சேது சமுத்திர திட்டத்தை ஜெயலலிதா வேண்டாம் என கூறுவதற்கு, அந்த திட்டத்தை தி.மு.க., கொண்டு வந்தது என்பதால் தான். சுப்ரீம் கோர்ட் வரை சேது சமுத்திர திட்டத்தை முடக்கியவரா, தமிழகத்தை முன்னேற்றப்போகிறார். தமிழர்களை காப்பாற்றப்போகிறார். 
சமச்சீர் கல்வி திட்டத்தின் வெற்றிக்கு தி.மு.க., தான் காரணம். சமச்சீர் கல்வியை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்குகளை சென்னை ஐகோர்ட்டும், சுப்ரீம்கோர்ட்டும் தள்ளுபடி செய்து விட்டன. சமச்சீர் கல்வி வழக்கில் தமிழக அரசுக்கு கிடைத்த முதல் சம்மட்டி அடி. 
இது போல தான் அண்ணா நூலகத்தை முடக்கி, அங்கு மருத்துவனை ஆக்குவது என்ற அ.தி.மு.க.,வின் முடிவும் நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு உள்ளானது. முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கு, 15 ஆண்டுகளாக வேண்டுமென்றே இழுக்கப்பட்டு வருகிறது. வாய்தா மேல் வாய்தா வாங்கி நாட்களை கடத்துகிறார். குற்றவாளி தான் விரும்பும் நீதிபதி விசாரித்தால் தான், நான் விசாரணைக்கு வருவேன் என்று கூறுவது எங்காவது நடந்தது உண்டா. இங்கு தான் இந்த அநீதி நடக்கிறது. 
1952ல் அண்ணா நடத்திய தி.மு.க., மாநில மாநாடு, 2வது மாநாடு. அப்போது வரவேற்புக்குழு தலைவராக இருந்தவர் அன்பில் தர்மலிங்கம். இதன்பின் 1960ல் நடந்த மாநாடு, தி.மு.க., வின் 5வது மாநாடு. இம்மாநாட்டில் தான் "அண்ணா வழியில் அயராது உழைப்போம், இந்தி திணிப்பை எதிர்ப்போம்', மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி' என தி.மு.க., வின் ஐந்து முக்கிய கொள்கைள் அறிவிக்கப்பட்டன. 10 மாநில மாநாடுகளில் 6 மாநாடுகளில் தி.மு.க., வின் தலைவர் நான் தான் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். திருச்சி மாநகரம் "சுயமரியாதை தோட்டம்,

சேது சமுத்திர திட்டம் தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும். சேது சமுத்திர திட்டத்தை ஆதரிப்பவர்கள் தி.மு.க, கூட்டணிக்கு வருவார்கள். மதவாதத்தை எதிர்ப்பவர்கள் தி.மு.க, கூட்டணிக்கு வருவார்கள். நாம் உருவாக்கும் அணி வெற்றி பெறப்போகிறது. இதற்கு கூட்டணி கட்சி தலைவர்கள் உறுதுணையாக இருப்பர். இந்தியாவில் ஜனநாயகம் தலைப்பதற்கு நாம் காரணகர்த்தாவாக நாம் இருப்போம் என்றார்.

ad

ad