புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 பிப்., 2014


    நாடாளுமன்ற வரலாற்றில் மிக மோசமான சம்பவம்: மிளகுப் பொடி தூவிய எம்.பி.க்களின் மோசமான நடத்தை

சட்டமியற்றும் அதிகாரம் படைத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று தங்களது மோசமான நடத்தையை வெளிப்படுத்தினர். தெலங்கானா விவகாரம் குறித்து இதுவரை வாய்
வார்த்தையாகப் பேசியும் கைகலப்பு அமளியில் ஈடுபட்டும் தங்கள் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்திய ஆந்திர எம்.பி.க்கள். இன்று தங்களது இன்னொரு மோசமான முகத்தை வெளிப்படுத்தினர்.
ஆந்திர மாநிலத்தைப் பிரிக்கக் கூடாது என்று ஒரு தரப்பும், தெலங்கானா தனிமாநிலம் அமைய வேண்டும் என்று ஒரு தரப்புமாக ஆந்திர எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் கடும் அமளியில் ஈடுபட்டனர். அப்போது, காங்கிரஸ் எம்.பி., எல்.ராஜகோபால் வித்தியாசமாக மிளகு ஸ்ப்ரே அடித்து அவையில் எல்லோருக்கும் எரிச்சலை ஊட்டி தனது ஆக்ரோஷப் போராட்டத்தை உணர்த்தினார். அவர், ஆந்திர மாநிலத்தைப் பிரிக்கக் கூடாது என்ற அணியில் உள்ள காங்கிரஸ் எம்.பி.
மிளகுப் பொடி தூவிய வேகத்தில், கே.நாராயண ராவ் என்பவரின் கண்களில் மிளகுப் பொடி விழுந்து, பெரும் கண் எரிச்சலை அவருக்கு ஏற்படுத்தியது. இதை அடுத்து அவர் உள்ளிட்ட மூன்று எம்.பி.க்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இவர்களில் நாராயண ராவுக்கு கடுமையான நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.
இதை அடுத்து கூச்சல் குழப்பத்தை  ஏற்படுத்தி, அமளியில் ஈடுபட்ட 18 எம்.பி.க்களை மக்களவையில் இருந்து சஸ்பெண்ட் செய்து அவைத்தலைவர் மீராகுமார் உத்தரவிட்டார். மேலும், நாடாளுமன்ற வரலாற்றில் இது மிகவும் மோசமான சம்பவம் என்று அவர் வர்ணித்தார்.
இதற்கிடையே வன்முறைக் களறிகளால் நாடாளுமன்ற மக்களவை அல்லோலகல்லோலப்பட்ட உடனே, காற்று அடைத்த முகமூடிகள் நாடாளுமன்ற அரங்குக்குள் கொண்டுவரப்பட்டன.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள் பட்டியலை மக்களவைத் தலைவர் வாசித்து முடித்த உடனே மக்களவை ஒத்தி வைக்கப்பட்டது.
அப்போது, தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த வேணுகோபால் ரெட்டி, மக்களவை அமளிக்கிடையே மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்தார் என்று தகவல்கள் பரவின. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், வேணுகோபால் ரெட்டி, ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், தான் கத்தியை எடுத்ததாகக் கூறுவது தவறு என்றும், தான் மைக் ஒன்றையே வெளியில் எடுத்ததாகவும் கூறினார். இதற்காக தான் ஒன்றும் மன்னிப்பு கோரப் போவதில்லை என்றும், தெலங்கானா நாட்டின் 29வது மாநிலமாக வருவதை தாம் முழுக்க முழுக்க எதிர்ப்பதாகவும் அவர் கூறினார்.
நாடாளுமன்றத்தில் இந்தக் களேபரங்கள் நடந்து கொண்டிருந்த நேரத்தில் அங்கே ஏற்பட்ட கைகலப்பில் ஒரு கணினி உடைந்து சேதமடைந்தது.
இந்த வன்முறைக் காட்சிகள் அரங்கேறுவதற்கு சற்று முன்னதாக, உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே, தெலங்கானா மசோதாவை தாக்கல் செய்வதாகக் கூறினார். அதைக் கேட்ட உடனே வன்முறை தலைதூக்கியது.
தெலங்கானா விவகாரத்தில் தங்கள் கட்சி எம்.பி.க்கள் நடந்து கொள்ளும் விதத்தைப் பார்த்தால் தன் இதயத்தில் ரத்தம் கசிகிறது என்று நேற்றுத்தான் பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad