புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 பிப்., 2014

நிஷா பிரித்தானிய அரச தரப்புடன் பேச்சு! ஜெனிவாவில் உறுப்பு நாடுகளுடன் கலந்துரையாட ஏற்பாடு
இலங்கைக்கு மூன்றுநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்து தெற்கு மற்றும் மத்திய ஆசிய  விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால் நேற்று இலங்கையிலிருந்தவாறு லண்டன் பயணமானார்.
லண்டன் சென்றுள்ள நிஷா பிஸ்வால் அங்கு பிரிட்டன் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுடன் பேச்சு நடத்திவிட்டு லண்டனிலிருந்து ஜெனிவாவுக்கு விஜயம் செய்யவுள்ளதுடன், அங்கு ஜெனிவா மனித உரிமைப் பேர­வைக்­கான இந்­தி­யாவின் தூது­வ­ரையும் சந்­தித்து பேச்­சு ­ந­டத்­த­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.
ஜெனிவா மனித உரிமைப் பேர­வையில் இலங்கை தொடர்பில் அமெ­ரிக்­கா­வினால் கொண்­டு­ வ­ரப்­ப­ட­வுள்ள பிரே­ர­ணைக்கு பிரிட்­டனும் அனு­ச­ரணை வழங்­க­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்ள நிலையில் அமெ­ரிக்க உதவி இரா­ஜாங்க செய­லா­ளரின் லண்டன் விஜயம் முக்­கி­யத்­து­வ­மிக்­க­தாக கரு­தப்­ப­டு­கின்­றது.
அதன்­படி பிரிட்டன் அர­சாங்­கத்தின் பல்­வேறு முக்­கி­யஸ்­தர்­க­ளுடன் கலந்­து­ரை­யா­டல்­களை நடத்­தி­விட்டு அங்­கி­ருந்­த­வாறு ஜெனி­வா­வுக்கு விஜயம் செய்­ய­வுள்ள நிஷா பிஷ்வால் அங்கு மனித உரிமைப் பேர­வையின் உறுப்பு நாடு­க­ளுடன் பேச்­சு­வார்த்­தை­களை நடத்­த­வுள்ளார்.
குறிப்­பாக ஜெனிவா மனித உரிமைப் பேர­வைக்­கான இந்­தி­யாவின் நிரந்­தர வதி­விட பிர­தி­நிதி திலிப் சிங்­குடன் நிஷா தேசாய் பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்ளார். இலங்கை தொடர்பில் அமெ­ரிக்­கா­வினால் கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்ள பிரே­ரணை தொடர்­பா­கவே இந்­திய பிர­தி­நிதி திலிப் சிங்­குடன் நிஷா பிஷ்வால் கலந்­து­ரை­யா­ட­வுள்ளார்.
மேலும் எதிர்­வரும் மார்ச் மாதம் நடை­பெ­ற­வுள்ள ஐக்­கிய நாடு­களின் மனித உரிமைப் பேர­வையின் 25 வது கூட்டத் தொடரில் இலங்­கைக்கு எதி­ராக பிரே­ரணை கொண்­டு­ வ­ரப்­படும் என்றும் எனினும் பொரு­ளா­தார தடைகள் விதிக்­கப்­ப­டு­வது தொடர்பில் எந்த விட­யமும் பேசப்­ப­ட­வில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

ad

ad