புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 பிப்., 2014



இந்தியாவிற்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி வலுமையான நிலையில் உள்ளது.
டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஒரு நாள் தொடரை 0–4 என்ற கணக்கில் பறிகொடுத்து கடுமையான விமர்சனத்திற்குள்ளான இந்திய அணி அடுத்ததாக இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட
தொடரில் பங்கேற்கிறது.
இந்தியா–நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஆக்லாந்து ஈடன் பார்க் மைதானத்தில் இன்று தொடங்கியது.
தொடரை இழக்காமல் இருந்தால் மட்டுமே இந்திய அணியால் டெஸ்ட் தரவரிசையில் இரண்டாவது இடத்தை தக்க வைத்துக் கொள்ள முடியும்.
போட்டியில் முதலில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து முதல் இனிங்சிற்காக துடுப்பெடுதாடி வரும்  நியூசிலாந்து அணி, முதல் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்களை இழந்து 329 ஓட்டங்களை எடுத்து வலுமையான நிலையை பெற்றுள்ளது.
மெக்கல்லம் 143 ஓட்டங்களுடனும், ஆண்டர்சன் 42 ஓட்டங்களுடம் ஆட்டம் இழக்காமல் களத்தில் உள்ளனர். வில்லியம்சன் 113 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
இந்திய அணியில் இஷாந்த் சர்மா 2 விக்கெட்களையும், ஜாகீர்கான் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ad

ad