புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 பிப்., 2014

அமெரிக்காவின் பிரேரணைக்கு இந்தியா நிபந்தன
ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால்  முன்வைக்கப்படவுள்ள பிரேரணைக்கு இந்தியா நிபந்தனையுடன் ஆதரவளிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. அதாவது திருத்தத்தின் பின்னராக ஆதரிக்கும் எனக் கூறப்படுகின்றது.
இந்திய மத்திய அரசாங்கத்தின் உயர் அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி த ஹிந்து பத்திரிகை இதனைத் தெரிவித்துள்ளது.
இலங்கையில் வடமாகாண சபைத் தேர்தலை நடத்தியதைத் தவிர, மனித உரிமைகள் மற்றும் மறுசீரமைப்பு விடயத்தில் ஏனைய திருப்திகரமான செயற்பாடுகள் எவையும் இடம்பெறவில்லை என்று இந்தியா கருதுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இந்தியாவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலைப் அடிப்படையாக கொண்டே, இலங்கை தொடர்பான நிலைப்பாடு தீர்மானிக்கப்படும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கு சென்றுள்ள இலங்கை ஊடகவியலாளர் குழு ஒன்று கடந்த புதன்கிழமை அவரை சந்தித்த போது, இந்த கருத்து வெளியிடப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது இந்தியா தேர்தல் மனநிலையில் உள்ளது. இந்த நிலையில் அமெரிக்கா இலங்கை தொடர்பில் முன்வைக்கவுள்ள பிரேரணை குறித்த நிலைப்பாடும், இந்த தேர்தலை மையமாக வைத்தே மேற்கொள்ளப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதாவது இந்தியா தீர்மானத்தினை ஆதரித்தது என்றும் இருக்கவேன்டும் அதே நேரம் மஹிந்த ராஜபக்ஷ அரசினை பாதுகாப்பதாகவும் இருக்கவேண்டும் என்பதே காங்கிரஸ் அரசின் நிலைப்பாடு.
எவ்வாறாயினும் அமெரிக்காவின் பிரேரணையின் இறுதி வடிவத்தை காணாமல் இந்தியா தமது நிலைப்பாட்டை அறிவிக்காது என்று, இந்திய வெளிவிவகார செயலாளர் சுஜாதா சிங் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ad

ad