புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 பிப்., 2014

ஐபிஎல் ஏலத்தில் வீரர்களுக்கு கிராக்கி

இந்திய அணியில் இதுவரையிலும் இடம்பெறாத ஆனால் உள்ளூர் தொடர்களில் ஆதிக்கம் செலுத்தி வரும் வீரர்களுக்கு ஐபிஎல் ஏலத்தில் கிராக்கி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.7வது ஐபிஎல் போட்டிகளுக்கான ஏலம் வருகிற 12,13ம் திகதிகளில் நடைபெற உள்ளது.
இதில் பங்கேற்கும் இந்திய மற்றும் வெளிநாட்டு வீரர்களின் ஏல மதிப்பு கடந்த 29ம் திகதி வெளியிடப்பட்டது.
ஷேவாக், யுவராஜ் உள்ளிட்ட 11 வீரர்களின் அடிப்படை விலை மதிப்பு ரூ.2 கோடி என நிர்ணயிக்கப்பட்டது.
இதுதவிர ரூ.1.5 கோடி, ரூ 1 கோடி மற்றும் ரூ 50 லட்சத்துக்கான அடிப்படை விலை வரம்பில் வரும் வீரர்களின் விவரமும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்திய அணியில் இடம்பெறாத அதேசமயம் ரஞ்சி உள்ளிட்ட உள்ளூர் தொடர்களில் சாதித்து வரும் வீரர்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டது.
அனைத்து மாநில கிரிக்கெட் வாரியங்களும் வீரர்களின் பெயர்களை பரிந்துரைத்துள்ளன, 651 பேர் கொண்ட அந்தப் பட்டியலில் வெளிநாட்டு வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.
ஏற்கெனவே ஐபிஎல் போட்டியில் பங்கேற்றவர்கள், பங்கேற்காதவர்கள் என இரண்டு பிரிவுகளில் வீரர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
இந்தப் பட்டியல் அனைத்து அணி நிர்வாகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
ஏலத்தில் எடுக்க விரும்பும் வீரர்கள் குறித்த விவரத்தை பிப்ரவரி 3ம் திகதிக்குள் அணிகள், ஐபிஎல் நிர்வாகத்திடம் தகவல் தெரிவிக்க வேண்டும்.
இந்த வீரர்களுக்கான அடிப்படை விலை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
19 வயதுக்குட்டோருக்கான உலகக் கிண்ண போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியின் அணித்தலைவர் உன்முக்த் சந்த், ரஞ்சி தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ரிஷி தவன், மணிஷ் பாண்டே, ரஜத் பாட்டியா, இக்பால் அப்துல்லா, சுமன் ஆகியோருக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே தேசிய அணியில் இடம்பெற்ற வீரர்கள் பட்டியலில் கூடுதலாக 12 வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர், இதனால் அந்த எண்ணிக்கை 244 ஆக உயர்ந்தது.
இதில் இந்திய வீரர்கள் வருண் ஆரோன், ஹேமங் பதானி, லட்சுமி சுக்லா, ஆவிஷ்கர் சல்வி, வி.ஆர்.வி. சிங் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

ad

ad