புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 பிப்., 2014


சமூக வலைத்தள பாவனைகளை உடனடியாக தடை செய்ய முடியாது

நன்கு ஆராய்ந்த பின்பே நடவடிக்கை

சமூக வலைத்தளமான ‘பேஸ்புக்’ கினால் ஏற்படக்கூடிய பாதிப் புகளை தடுக்கும் வகையிலான கட்டுப்பாடு இலங்கைக்கு அவசியமென தகவல் ஊடகத்துறையமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல நேற்று தெரிவித்தார்.
இருப்பினும் இந்த கட்டுப் பாட்டினை நாட்டின் தகவல் தொழில்நுட்பத்தில் பாதிப்பினை ஏற்படுத்தாத வகையில் எவ்வாறு செயற்படுத்தலாமென்பது குறித்து தான் ஆராயத் தொடங்கியி ருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் ஊடகத்துறை யமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன் போது பேஸ்புக்கின் காரணமாக எமது நாட்டில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு மரணங்கள் குறித்து அமைச்சரிடம்
கேள்வியெழுப் பப்பட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். பேஸ்புக் இன்று சர்வதேச பிரச்சினை யாகியுள்ளது.
இது 95 சதவீத தகவல் சாதனமாகவுள்ள போதும் 05 சதவீதம் பாதிப்பினை ஏற்படுத்தும் ஒரு விடயமாகவே அடையாளம் காணப்பட்டுள்ளது. பாதிப்புகளை தடுக்கும் வகையில் இதன் பாவனையை இலங்கையில் தடை செய்தால் தகவல் தொடர்பாடல் பாதிக்கப்படக்கூடும். இது சமூக ஊடகத்துடன்தொடர்புபட்ட விடயமாகையால் அவதானத்துடன் கையாள வேண்டி யுள்ளது. எடுத்த எடுப்பிலேயே இது தொடர்பில் அரசாங்கத்தினால் எந்தவொரு முடிவையும் எடுக்க இயலாது. அவ்வாறு எடுக்கும் பட்சத்தில் இலங்கையில் ஊடக சுதந்திரம் இல்லையென்ற கருத்துக்கு அது வழிவகுக்கும். எனவே சமூக ஊடகம் தொடர்பிலான பிரகடனத்திற்கமைய நாம் தீர்மானங்களை மேற்கொள்வோம். அது தொடர்பிலான நிலைமைகளை நான் ஆராயத்தொடங் கியுள்ளேன் எனவும் அவர் தெரிவி த்தார்.
இதேவேளை பெற்றோர் தமது பிள்ளைகள் இணையத்தளம் மற்றும் பேஸ்புக்கினை எந்தவகையில் உபயோகித்து வருகிறார்களென்பது குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியமெனவும் பொலிஸ் பேச்சாளர் அத்தியட்சகர் அஜித் ரோஹண கேட்டுக் கொண்டுள்ளார்.

ad

ad