புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 பிப்., 2014


ஜெனிவா தீர்மானம்! இந்தியாவின் கோரிக்கையை இலங்கை நிராகரிப்பு
இந்தியாவின் கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. அமெரிக்காவுடன் இணைந்து செயற்படுமாறு இந்தியா, இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளது.
குறிப்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானம் தொடர்பில் இவ்வாறான கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
எனினும், அமெரிக்காவுடன் இணைந்து செயற்பட முடியாது என இலங்கை அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் தீர்மானத்தை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
மேற்குலக நாடுகளின் அரசியல் நோக்கங்களின் அடிப்படையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படத் திட்டமிடப்பட்டுள்ளது அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையின் 74 அம்ச அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் பதிலளித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ad

ad