புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 பிப்., 2014

கம்யூ. கட்சிகளுக்கு தென்காசி, கோவை: அ.தி.மு.க. தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தை
பாராளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து அ.தி.மு.க.வுடன் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் நேற்று பேச்சுவார்த்தை நடத்தின.

அ.தி.மு.க. சார்பில் முதல்– அமைச்சர் ஜெயலலிதா நியமித்துள்ள தொகுதி பங்கீட்டு குழுவினரான ஓ.பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வநாதன், கே.பி முனுசாமி, வைத்தியலிங்கம் ஆகியோர் இந்த பேச்சுவார்த்தையை நடத்தினார்கள்.
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு சார்பில் மாநில தலைவர் ஜி.ராமகிருஷ்ணன், சவுந்தர்ராஜன், பாலகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர். இந்திய கம்யூனிஸ்டு சார்பில் அதன் மாநில தலைவர் தா.பாண்டியன், மகேந்திரன், பழனிசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த முதல் கட்ட பேச்சுவார்த்தையில் தங்களுக்கு எத்தனை தொகுதிகள் வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டது.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்த மார்க்.கம்யூனிஸ்டு கன்னியாகுமரி, மதுரை, கோவை ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டது. எனவே தற்போதும் அதே தொகுதியை ஒதுக்க வேண்டும் என்று வற்புறுத் தியது.
இந்திய கம்யூனிஸ்டு கடந்த தேர்தலில் போட்டியிட்ட வடசென்னை, நாகப்பட்டினம், தென்காசி ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டது. இந்த தேர்தலில் அந்த தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்தது.
கடந்த தேர்தலில் தலா 3 தொகுதிகளில் போட்டியிட்டாலும் மார்க். கம்யூனிஸ்டு கோவையிலும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி தென்காசியிலும் வெற்றி பெற்றன. எனவே, வெற்றி பெற்ற அந்த தொகுதிகளில் அதே கட்சிகள் மீண்டும் போட்டியிட்டால், அந்த தொகுதிகள் வழங்கப்படும் என்று அ.தி.மு.க. தரப்பில் கூறப்பட்டதாக தெரிகிறது.
ஆனால், இரண்டு கம்யூனிஸ்டு கட்சிகளும் தலா 3 இடங்கள் வேண்டும் என்று வற்புறுத்தியதாக சொல்லப்படுகிறது. அதற்கு அ.தி.மு.க. தரப்பில், ஏற்கனவே 2 கட்சிகளுக்கு அ.தி.மு.க. ஆதரவுடன் தலா ஒரு டெல்லி மேல்–சபை எம்.பி (டி.ராஜா, ரங்கராஜன்) பதவி வழங்கப்பட்டுள்ளது. எனவே, இந்த தேர்தலில் ஏற்கனவே வெற்றி பெற்ற தொகுதிகளில் மட்டும் போட்டியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டதாக தெரிகிறது.
தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையின் போது கட்சி மேலிடத்தில் கேட்டுக்கொண்டு தலா 2 இடங்கள் வழங்க முடியுமா என்பது குறித்து தெரிவிப்பதாக அ.தி.மு.க.சார்பில் கூறப்பட்டதாக சொல்லப்படுகிறது. என்றாலும் ஒரு சீட் உறுதி என்றே தெரிகிறது.
அடுத்த கட்ட பேச்சுவார்த்தையின் போது தங்கள் கருத்து ஏற்கப்படும் என்று இரண்டு கட்சிகளும் நம்பிக்கையுடன் உள்ளன.

ad

ad