புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 பிப்., 2014


இயக்குநர் பாலுமகேந்திரா மரணம்
 

 
தமிழ்சினிமாவின் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவரான இயக்குநர் பாலுமகேந்திரா, உடல்நலக் குறைவால் இன்று மரணம் அடைந்தார்.
மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், கவலைக்கிடமான நிலையில் இன்று (13.2.2014) அதிகாலையில் சென்னை விஜயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  இயக்குநர்கள் பாலா, அமீர், ராம் உள்ளிட்டோர் மருத்துவமனை சென்று சிகிச்சை குறித்து விசாரித்தனர்.   உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.  இந்நிலையில் 11 மணிக்கு மேல் அவர் மரணம் அடைந்தார்.
பாலுமகேந்திரா கடைசியா இயக்கிய படம், ‘’தலைமுறைகள்’’.  இந்தப்படத்தில்,  அவரே நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒளிப்பதிவாளர், இயக்குநர், எடிட்டர், நடிகர் என்று பண்முகம் கொண்டவர் பாலுமகேந்திரா.  1946 ம் ஆண்டு மே மாதம் 19 ம் தேதி இலங்கையில் மட்டக்களப்பு அருகே அமிர்தகழி என்ற சிற்றூரில் பிறந்தவர் பாலநாதன் மகேந்திரன் என்ற பாலு மகேந்திரா. இயற்பெயர், மகேந்திரா. இலங்கையில் இவரது பக்கத்து வீட்டுக்காரர் கவிஞர் காசி ஆனந்தன்.
லண்டனில் தன்னுடைய இளநிலைக் கல்வி படிப்பினை முடித்தார். பூனா திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவுக்கலை பயின்ற பாலு மகேந்திரா 1971ல் தங்கப்பதக்கம் பெற்றார்.
 'நெல்லு' மலையாள படத்துக்கு ஒளிப்பதிவு செய்தார். அப்படத்துக்கு 1972ல் சிறந்த ஒளிப்பதிவுக்கு கேரள மாநில விருது பெற்றார். அதைத் தொடர்ந்து பல மலையாள திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார். கெ. எஸ். சேதுமாதவனின் 'சுக்கு',' ஜீவிக்கான் மறந்நு போய ஸ்தீரி' 'சட்டக்காரி' பி என் மேனோனின் 'பணிமுடக்கு' போன்றவை முக்கியமான படங்கள்.
ஒளிப்பதிவாளரான இவர் இயக்குநராகவும் மாறினார்.  1977ல் பாலு மகேந்திரா அவரது முதல் படமான 'கோகிலா'வை கன்னட மொழியில் இயக்கினார். பாலுமகேந்திரா ஒளிப்பதிவு செய்த முதல் தமிழ்படம் முள்ளும் மலரும் 1977ல் வெளியாயிற்று. 1978ல் தமிழில் அவரது முதல் படமான 'அழியாத கோலங்கள்' வெளியாயிற்று. பாலு மகேந்திரா மணிரத்தினம் போன்ற பல முக்கியமான இயக்குநர்களின் முதல் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை பாலு மகேந்திரா மூன்று முறை பெற்றுள்ளார் வீடு, சந்தியாராகம், வண்ண வண்ண பூக்கள். சிறந்த திரைக்கதைக்கு கோகிலா, அழியாத கோலங்கள் ஆகியவை விருது பெற்றன. ஜூலி கணபதி சிறந்த படத்தொகுப்புக்கான சாந்தாராம் விருது பெற்றது. 
பாலுமகேந்திரா இயக்கிய படங்கள் :


கோகிலா
அழியாத கோலங்கள்
மூடுபனி
மஞ்சு மூடல் மஞ்சு (மலையாளம்)
ஓலங்கள் (மலையாளம்)
நீரக்ஷ்னா (தெலுங்கு)
சத்மா (ஹிந்தி)
ஊமை குயில்
மூன்றாம் பிறை
நீங்கள் கேட்டவை
உன் கண்ணில் நீர் வழிந்தால்
யாத்ரா
ரெண்டு தொகல திட்ட (தெலுங்கு)
இரட்டை வால் குருவி
வீடு
சந்தியாராகம்
வண்ண வண்ண பூக்கள்
பூந்தேன் அருவி சுவன்னு
சக்ர வியூகம்
மறுபடியும்
சதி லீலாவதி
அவுர் ஏக் ப்ரேம் கஹானி (ஹிந்தி)
ராமன் அப்துல்லா
ஜூலி கணபதி
அது ஒரு கனாக்காலம்
தலைமுறைகள்

ad

ad