புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 பிப்., 2014

ஹூலுகல்லவின் மனைவியின் நிலை கண்டு கவலையடைந்த ஜனாதிபதி
தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தின் முன்னாள் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹூலுகல்லவின் குடும்பத்தினரின் நிலை கண்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கவலையடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
லக்ஷ்மன் ஹூலுகல்லவின் சட்டரீதியான மனைவியான தில்ருக்ஷி ஹூலுகல்ல மற்றும் பிள்ளைகளுக்கு நேர்ந்துள்ள நிலைமை காரணமாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு அவர்களின் குடும்ப பிரச்சினையில் தலையிட நேர்ந்துள்ளதாக அலரி மாளிகை வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ள தில்ருக்ஷி ஹூலுகல்ல, தனது கணவரின் செயற்பாடுகள் காரணமாக தமது குடும்பம் மிகவும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக கூறியுள்ளார். இதனால் பிரச்சினையில் தலையிட்டு நியாயமான தீர்வை பெற்று தருமாறு அவர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
லக்ஷ்மன் ஹூலுகல்ல ஏற்கனவே தனக்கு சொந்தமான சொத்துக்கள் மற்றும் வருமான வழிகளை சுதர்மா நெத்திகுமாரவுக்கு வழங்கியுள்ளார் எனவும் தில்ருக்ஷி ஹூலுகல்ல ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.
திருமதி ஹூலுகல்லவுக்கு ஏற்பட்டுள்ள நிலைமையை உணர்ந்து கொண்ட ஜனாதிபதி, லக்ஷ்மன் ஹூலுகல்லவை அலரி மாளிகைக்கு அழைத்து அது பற்றி விசாரித்துள்ளார்.
இதன் போது தில்ருக்ஷி கூறியது உண்மைதான் என்பதை உணர்ந்து கொண்ட ஜனாதிபதி, ஹூலுகல்ல தற்போது மேற்கொண்டு வரும் இராணுவ வீடமைப்புத் திட்டத்தை உடனடியாக தில்ருக்ஷியிடம் ஒப்படைக்குமாறு ஹூலுகல்லவுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இராணுவ வீடமைப்புத் திட்டத்தின் கீழ் இராணுவத்தினருக்கு 15 ஆயிரம் வீடுகளை இந்திய நிறுவனம் ஒன்று நிர்மாணித்து வருகிறது.
இந்த திட்டத்தின் உறங்கும் பங்காளர் லக்ஷ்மன் ஹூலுகல்ல ஆவார். லக்ஷ்மன் ஹூலுகல்ல பணிப்பாளராக பணியாற்றிய காலத்தில் தனது அதிகாரத்தை பயன்படுத்தி வீடமைப்புத் திட்டத்தின் வீடுகளை நிர்மாணிக்கும் ஒப்பந்தத்தை இந்திய நிறுவனத்திற்கு பெற்றுக்கொடுத்தார்.
இந்த திட்டத்தை இந்திய நிறுவனத்திற்கு வழங்கியதன் மூலம் கிடைக்க வேண்டிய பெருந்தொகை தரகு பணம் சில கட்டங்களாக அவருக்கு கிடைக்க உள்ளதுடன் ஜனாதிபதியின் தலையீட்டை அடுத்து இந்த தரகு பணம் எதிர்காலத்தில் தில்ருக்ஷி ஹூலுகல்லவுக்கு கிடைக்க உள்ளது.

ad

ad