புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 பிப்., 2014

வேட்புமனு ஏற்பு இன்றுடன் முடிவு; மேல் மாகாணத்தில் ஐ.ம.சு.முதாக்கல்

கம்பஹாவில் மட்டுமே ஐ.தே.க. நேற்று வேட்பு மனு

மேல் மாகாணத்தில் ஐக்கிய தேசியக் கட்சி கம்பஹா மாவட்டத்திற்கு மட்டுமே வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளதுடன் இன்று ஏனைய மாவட்டங்களுக்கான வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யவுள்ளது.
இதேவேளை; மக்கள் விடுதலை முன்னணி களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கும்.  ஜனநாயகக் கட்சி மூன்று மாவட்டங்களுக்கும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன.
தென் மாகாணத்திற்கான வேட்பு மனுவை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இன்று தாக்கல் செய்யவுள்ள துடன் ஐக்கிய தேசியக் கட்சி அம்பாந் தோட்டை மற்றும் மாத்தறை மாவட்டங் களுக்கான வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் அரசியல் கட்சிகள் ஏழும் சுயாதீனக்குழுக்கள் நான்கும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளதுடன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஜனநாயகக் கட்சி, எக்சத் லங்கா மகா சபை, நவ சமசமாஜக் கட்சி, ஜனசெத, தொழிலாளர் கட்சி மற்றும் 4 சுயாதீன குழுக்களும் நேற்று வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளன.
கம்பஹா மாவட்டத்தில் 07 அரசியல் கட்சிகள் மற்றும் இரண்டு சுயாதீன குழுக்கள் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளன. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, மக்கள் விடுதலை முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி, ஜனநாயகக் கட்சி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், எங்சத் லங்கா மகா சபை, தேச பற்றுள்ள தேசிய இயக்கம் ஆகியன இவற்றுள் அடங்கும்.
களுத்துறை மாவட்டத்தில் ஏழு அரசியல் கட்சிகளும் இரண்டு சுயாதீன குழுக்களும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளன.  தென் மாகாண சபையில் காலி மாவட்டத்தில் ஏழு அரசியல் கட்சிகளும் 2 சுயாதீன குழுக்களும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளன.
மாத்தறை மாவட்டத்தில் நான்கு அரசியல் கட்சிகளும் 3 சுயாதீன குழுக்களும் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளன. இவற்றில் ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஜனநாயகக் கட்சி ஆகியனவும் உள்ளடங்குகின்றன.
அம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஆறு அரசியல் கட்சிகளும் இரண்டு சுயாதீன குழுக்களும் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளன. இவற்றுள் ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஜனநாயகக் கட்சி ஆகியனவும் உள்ளடங்கும்.  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இன்றைய தினம் தென் மாகாணத்தில் வேட்பு மனுவைத் தாக்கல் செய்யவுள் ளது.

ad

ad