புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 பிப்., 2014

இராஜினாமா செய்த கிறிஸ் நோனிஸ்!- ஏற்க மறுத்த ஜனாதிபதி
பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் கிறிஸ் நோனிஸ் பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் கையளித்ததாக அரசாங்க வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி நத்தார் விடுமுறையில் சென்றிருந்த நோனிஸ் ஜனவரி 25 ஆம் திகதியே பணிக்கும் திரும்பியுள்ளார்.
விடுமுறையில் இலங்கை சென்றிருந்த உயர்ஸ்தானிகர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளார்.
அதனை ஏற்க மறுத்த ஜனாதிபதி, எந்த பிரச்சினை வந்தாலும் தான் பார்த்து கொள்வதாக நோனிஸிடம் கூறியுள்ளார்.
எனினும் விளையாட்டு வீரர்கள் தமக்கு திறமையும் ஆற்றாலும் இருக்கும் போது ஓய்வுபெறுவதை போல் தனக்கும் ஓய்வுபெற வேண்டிய தேவை இருப்பதாக நோனிஸ், ஜனாதிபதியிடம் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் ஜனாதிபதியின் கோரிக்கையை அடுத்து அவர் தனது பதவி விலகல் கடிதத்தை திரும்பப் பெற்றுக்கொண்டுள்ளார்.
இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சேனுகா செனவிரட்ன, சஜீன் வாஸ் குணவர்தனவை வெளிவிவகார அமைச்சராக கருதி செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
வெளிவிவகார அமைச்சராக ஜீ.எல் பீரிஸ் பெயரளவில் இருக்கும் நிலையில், சஜின் வாஸ் குணவர்தனவே அதிகாரபூர்வமான வெளிவிவகார அமைச்சராக செயற்பட்டு வருவதாக அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சூழ்நிலையில் , சேனுகா செனவிரட்ன மற்றும் சஜின் வாஸ் குணவர்தன ஆகியோர் இணைந்து பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் நோனிஸூக்கு எதிராக செயற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
உயர்ஸ்தானிகரின் பணிகளுக்கு இவர்கள் இடையூறு ஏற்படுத்தி வருவதால், அதிருப்தியடைந்த அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய தீர்மானித்ததாக கூறப்படுகிறது.
கிறீஸ் நோனிஸ், பொதுநலவாய நாடுகளின் மாநாடு இலங்கையில் வெற்றிகரமாக நடத்தப்படுவதற்கான நடவடிக்கைகளை எடுத்திருந்தார்.
அத்துடன் புலம்பெயர் தமிழர்களுடன் மோதல்களுக்கு செல்லாமல் நெகிழ்வான போக்கை கடைப்பிடித்து வருகிறார்.
இதன் காரணமாக நோனிஸ், உயர்ஸ்தானிகர் பதவியில் நீடிக்க வேண்டும் என ஜனாதிபதி எண்ணுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ad

ad