புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 பிப்., 2014

கனிமொழி திடீர் மயக்கம்: மருத்துவமனையில் அனுமதி

திமுக எம்.பி. கனிமொழி உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியின் மகளும், எம்.பி.யுமான கனிமொழிக்கு திடீர் என்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் நிகழ்ச்சி ஒன்றில் பேச பல மணிநேரமாக ஓய்வின்றி பேச வேண்டியதை தயார் செய்தார். பல மணிநேரமாக வேலை பார்த்ததால் அவருக்கு மயக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து தான் கனிமொழி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதை அவரது குடும்பத்திற்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

ad

ad