புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 பிப்., 2014

மருத்துவர் சிவமோகன்-இராணுவம் வாய்த்தர்க்கம்!- முல்லை. வற்றாப்பளையில் சம்பவம்
வருடாந்த மெய்வல்லுநர் போட்டியை நடத்த தயாராகி வருகின்ற வற்றாப்பளை மகாவித்தியாலய மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனையில் வடமாகாணசபை உறுப்பினரும், வைத்திய கலாநிதியுமான சி.சிவமோகன் ஈடுபட்டிருந்த வேளை அங்கு சென்ற இராணுவப்புலனாய்வாளர்களால் அவ்விடத்தில் பதற்றம் ஏற்பட்டது.
வற்றாப்பளை மகாவித்தியாலயம் வருடாந்த மெய்வல்லுநர் போட்டியை நடத்த தயாராகி வருகின்றது.
அதன் ஒரு கட்டமாக, மரதன் ஓட்ட போட்டியில் பங்குபற்றவுள்ள மாணவர்களுக்குரிய மருத்துவ பரிசோதனைகளை செய்து தருமாறு பாடசாலை சமுகம் விடுத்த கோரிக்கைக்கு, முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலை நிர்வாகம் மறுப்பு தெரிவித்ததையடுத்து, வடமாகாணசபை உறுப்பினரும், வைத்திய கலாநிதியுமான சி.சிவமோகன் கடந்த 02.02.2014 அன்று குறித்த பாடசாலை மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகளை நடத்தினார்.
இந்த மருத்துவ பரிசோதனையில் 65 க்கு உட்பட்ட மாணவர்கள் பயனடைந்து கொண்டிருந்த வேளை, அங்கு சிவில் உடையில் பிரசன்னமாகியிருந்த இரண்டு இராணுவ புலனாய்வாளர்கள், மண்டபத்துக்குள்ளே வருவதும், வெளியே போவதுமாக நடமாடியதோடு, தமது கைப்பேசிகளில் அவ்வப்போது ஒளிப்படமும் எடுத்துக்கொண்டிருந்தனர்.
இதனை அவதானித்த வைத்திய கலாநிதி சி.சிவமோகன், அவர்களை நெருங்கிச் சென்று “என்ன வன்ம மனுசர்களடா நீங்கள். பாடசாலை பிள்ளைகளின்ட தேக ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட சாதாரண இந்த விசயத்தில கூட உங்களின்ட ஈனப்புத்திய காட்டுறீங்களடா? என்று சிங்கள பாசையில் பேச, அதற்கு அவர்கள், “தாம் தமது கடமையை செய்வதாக” திமிராக மறு பேச்சுக்கொடுத்தனர்.
கோபமடைந்த வைத்திய கலாநிதி சி.சிவமோகன், “ஓகே அப்படியே இருந்து போகட்டும். கடமைய பத்தி கதைக்கிற நீ, எப்படி என்னுடைய கடமைய செய்றதுக்கு குறுக்காக நிற்க முடியும்? உனக்கு என்ன றைட்ஸ் இருக்கு? இந்தா பார் நான் ஒரு மாகாணசபை உறுப்பினர். அதோட ஒரு டொக்டர். (அவர் அதை உறுதிப்படுத்தும் ஆவணத்தை காட்டுகிறார்) அரச ஊழியர்கள் எண்டால் அவர்களிட்ட அத உறுதிப்படுத்திற ஆவணங்கள் இருக்க வேணும். எங்க உன்ட ஜொப் அட்டைய எடு.” என்று கடும் தொனியில் மிரட்ட, அவர்கள் இருவரும், ஒருவரை ஒருவர் முழித்து முழித்து பார்த்துக்கொண்டனர்.
“உங்களுக்கு தகவல் சேகரிக்கிறதுக்கு இன்டைக்கு வேறு இடமே கிடைக்கேல்லையாடா? ஆரடா உங்கள பள்ளிக்கூடத்துக்குள்ள வரச்சொன்னது? உள்ளுக்குள்ள வந்ததே முதல் பிழை. அதிலயும் உறுதிப்படுத்துறதுக்கு ஒரு ஆவணமும் இல்லாமல் வந்திட்டு, உதில சண்டித்தனம் வேற செய்யிறது? ஒரு நிமிசம் கூட இனி இதில நிற்கக்கூடாது. நிற்கிறத கண்டன் நடக்கிறதே வேற!” என்று அவர் கடுமையாக பேசி துரத்த, அவர்கள் இருவரும் தாம் வந்திருந்த மோட்டார் சைக்கிளில் அவ்விடத்தை விட்டு அகன்றனர்.

ad

ad