புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 பிப்., 2014

காங்கிரஸ் கட்சியில் நடிகை ஜெயப்பிரதா?

நடிகை ஜெயப்பிரதா காங்கிரஸ் கட்சியில் இணையப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஜெயப்பிரதா. பின்னர் அரசியலில் ஈடு பட்டார். அமர்சிங் மூலம் சமாஜ்வாடி கட்சியில் சேர்ந்து உத்திரபிரதேசத்தில் ராம்பூர் தொகுதியில்
போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
தொடர்ந்து 2 முறை ராம்பூர் எம்.பி.யாக இருந்து வருகிறார்.அவரை தொகுதி மக்கள் ராம்பூர் கி காளி" என அழைத்து வருகின்றனர்.
இந்நிலையில் முலாயம் சிங் யாதவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பொதுச்செயலாளராக இருந்த அமர்சிங் கட்சியை விட்டு விலகினார் இதை தொடர்ந்து ஜெயப்பிரதாவும் கட்சியை விட்டு விலகினார்.
அமர்சிங் புதிய கட்சி தொடங்கியபோது ஜெயப்பிரதா அதில் இணைந்து செயல்பட்டார். தற்போது ஜெயப்பிரதா காங்கிரசில் சேர திட்டமிட்டு உள்ளார்.ஜெயப்பிரதா டெல்லியில் காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து தனது முடிவை தெரிவித்துள்ளார்.
மேலிடமும் அவரை கட்சியில் சேர்த்துக் கொள்ள சம்மதித்து விட்டது. விரைவில் அதிகாரப்பூர்வமாக கட்சி யில் சேர்த்துக் கொள்ளப்படுவார் என தெரிகிறது. ஆனால் அவர் போட்டியிட ராம் பூர் தொகுதி தரப்பட மாட்டாது ஏன் என்றால் அந்த தொகுதியில் அரச் குடும்பத்தை சேர்ந்தவரும், காங்கிரஸ் தலைவருமான நூர் பனோ போட்டியிடுகிறார்.
உத்திரபிரதேசம் மொரதாபாத் தொகுதியில் அவர் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுவார் என்று தெரிகிறது.

ad

ad