புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 பிப்., 2014

முஸ்லீம் மதத்திற்கு மாறினார் யுவன் ஷங்கர் ராஜா :
 இளையராஜா அதிர்ச்சி!
 



இசையமைப்பாளர் இளையராஜா மகனும், இசையமைப்பாளருமான யுவன் ஷங்கர் ராஜா முஸ்லிம் மதத்துக்கு மாறியுள்ளார்.  முஸ்லீம் பெண்ணை மணப்பதற்காகத்தான் யுவன், அந்த மதத்திற்கு மாறியு ள்ளார் என்றும்,  இவர் மதம் மாறியதால் தந்தை
இளையராஜாவுக்கும், யுவனுக்கும் தகராறு ஏற்பட்ட தாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.


இதுகுறித்து யுவன்சங்கர் ராஜா விளக்கம் அளித்துள்ளார்.  அவர்,  ‘’முஸ்லிம் ஆக மாறுவது என்பது திடீர் என எடுத்த முடிவு அல்ல. ஒன்றரை வருடமாக இஸ்லாம் பற்றிய புத்தகங்கள் படித்தேன். நிறைய ஆன்மீக அனுபவங்கள் கிடைத்தது. புனித குரானை படித்த பிறகு நிறைய கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் எனக்கு விடை கிடைத்தது.
என் தந்தை இளையராஜாவிடம் முஸ்லிம் மதத்துக்கு மாறப்போகும் முடிவு பற்றி சொன்னேன். இதை கேட்டதும் ஆரம்பத்தில் அவர் அதிர்ச்சியானார். அதன் பிறகு என்னை அவர் புரிந்து கொண்டு எனது முடிவை ஏற்றுக் கொண்டார்.

முஸ்லிமாக மாறியதால் எனக்கும் இளையராஜாவுக்கும் தகராறு ஏற்பட்டதாக வெளியான செய்திகளில் உண்மை இல்லை. எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் ஏற்படவில்லை.  மேலும், முஸ்லிம் பெண்னை மணப்பதற்காக நான் முஸ்லிமாக மாறியதாக சொல்லப்படுவதிலும் உண்மை இல்லை’’ என்று தெரிவித் துள்ளார்.

ad

ad