புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 பிப்., 2014

ரயில்வே சாரதிகள் வேலைநிறுத்தம் முடிவு; சேவைகள் இன்று வழமைக்குத் திரும்பும்

வேலைநிறுத்தத்தால் நேற்றும் பயணிகள் பெரும் பாதிப்பு
ரயில்வே லொக்கர்மோட்டிவ் சாரதிகளின் வேலைநிறுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

ரயில்வே தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் ரயில்வே திணைக்கள முகாமையாளர் தலைமையிலான அதிகாரிகளுக்குமிடையில் நேற்று இரவு வரை நடத்திய பேச்சுவார்த்தையின் பின்னர் வேலை நிறுத்தத்தை இடை நிறுத்துவதாக தொழிற் சங்கம் நேற்று இரவு அறிவித்தது.
இதனையடுத்து இன்று காலை முதல் ரயில் சேவைகள் வழமைக்குத் திரும்புமென எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று வேலை நிறுத்தம் தொடர்ந்த நிலையிலும் 95 சதவீதமான அலுவலக ரயில்களும் 80 சதவீதமான சாதாரண ரயில்களும் நேற்று சேவையில் ஈடுபடுத்தப்பட்டி ருந்ததாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்தது.
நேர அட்டவணைக்கமையாத போதிலும் அனைத்து அலுவலக ரயில் சேவைகளையும் நேற்றுக் காலை இடைக்கிடை முன்னெடுத்ததாக சுட்டிக்காட்டிய ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் ஏனைய ஒருசில சாதாரண ரயில் சேவைகளே தடைசெய்யப்பட்ட தாகவும் தெரிவித்தது.
இதனால் தூர இடங்களிலிருந்து கொழும்பு மற்றும் பகுதிகளுக்கு வந்திருந்தவர்கள் தமது சொந்த இடங்களுக்கு உரிய நேரத்தில் திரும்பிச் செல்ல முடியாதநிலை ஏற்பட்டிருந்தது.
கூடுதலான அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் கொழும்பிலேயே இயங்கி வரும் அதேநேரம் இவற்றில் பணிபுரியும் அநேகமானோர் வெளிமாட்டங்களிலிருந்து நாளாந்தம் கொழும்பு வந்து செல்பவர்களாவர். எனினும் ரயில் சாரதிகளின் வேலை நிறுத்தத்தினால் அரச மற்றும் தனியார் ஊழியர்களின் வரவில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டிருக்கவில்லை. மேலும் பல தனியார் மற்றும் அரச சார்பு தனியார் நிறுவனங்கள் ரயிலில் கடமைக்கு சமுகமளிக்கும் ஊழியர்களை நேற்றைய தினம் வழமையிலும் சற்று முன்னதாகவே வீடு செல்ல அனுமதித்திருந்தது.
எவ்வாறான போதும் லொக்க மோட்டீவ் சாரதிகளின்வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரும் முகமாக போக்குவரத்து அமைச்சு நேற்று மாலை வரை மேற்படி தொழிற்சங்கத்துடன் பேச்சு நடத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.
ரயில்வே திணைக்களத்தின் சேவைகளை கண்காணிக்கும் பொருட்டு சாரதிகள் தொழிற்சங்கத்தின் தலைவர் திஸாநாயக்க, போக்குவரத்து துறை அமைச்சர் குமார வெல்கமவினால் மேற்பார்வை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
இந்த நியமனத்தை உடனடியாக ரத்துச் செய்யுமாறு கோரி ஏனைய தொழிற்சங்கங்கள் அமைச்சரிடம் கடும் எதிர்ப்பை தெரிவித்ததையடுத்து அமைச்சர் இந்த நியமனத்தை ரத்துச் செய்துள்ளார்.
இது அசாதாரணமானதெனக் கூறியே லொக்க மோட்டீவ் சாரதிகள் உள்ளிட்ட சாரதிகள், தொழிற்சங்கத்தினர் கடந்த வியாழக்கிழமை மாலை முதல் வேலை நிறுத்தத்தை முன்னெடுத்து வருகின்றனர். இருப்பினும் அதே தொழிற்சங்கத்தைச் சேர்ந்த குறிப்பிட்ட சில சாரதிகள் கடமைக்கு சமுகமளித்துள்ளதுடன் ஓய்வுபெற்ற சாரதிகளும் கடமையில் இணைந்துகொள்ள முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ad

ad