புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 பிப்., 2014

சிறிலங்காவின் மனித உரிமை நிலைமை குறித்து ஜெனீவா பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் நிஷா பிஷ்வால் 
சிறிலங்காவின்  மனித உரிமை நிலைமைகள் குறித்து மத்திய மற்றும் தென் ஆசிய பிராந்தியத்திற்காக அமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளர் நிஷா பிஷ்வால், ஜெனீவா பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை
நடத்தியுள்ளார்.

பிரித்தானியாவிற்கான விஜயத்தை முடித்துக்கொண்ட பிஷ்வால் தற்போது ஜெனீவாவில் உள்ள இராஜதந்திரிகளுடன் சிறிலங்கா நிலைமைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார்.
எதிர்வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் சிறிலங்கா குறித்த தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது,

ஜெனீவாவில் கடமையாற்றி வரும் தூதுவர்கள் மற்றும் ராஜதந்திரிகளுடன் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. சிறிலங்கா நிலைமைகள் குறித்து ராஜதந்திரிகளுடன் நடத்திய சந்திப்பு வெற்றிகரமாக அமைந்தது என பிஷ்வால் சர்வதேச ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

ad

ad