புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 பிப்., 2014

ஜெனிவாவில் இலங்கை சார்பு நாடுகள் யோசனை
ஜெனீவாவில் அமெரிக்க சார்பு நாடுகள் இலங்கைக்கு எதிராக முன்வைக்கவுள்ள யோசனைக்கு எதிராக இலங்கை சார்பு நாடுகள் யோசனை ஒன்றை முன்வைக்கவுள்ளன.
இலங்கையின் ஆங்கில செய்திதாள் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
இது குறித்து கருத்துரைத்துள்ள இலங்கையின் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, அவ்வாறான முனைப்பு ஒன்று இடம்பெறுகின்றபோதும் இலங்கையின் அனுசரணையில் அது இடம்பெறவில்லை என்று குறிப்பிட்டார்.
இந்த முனைப்பு இலங்கையின் நட்பு நாடுகளால் முன்னெடுக்கப்படுகின்றன.
இதற்கு இலங்கை அரசாங்கம் ஆதரவு வழங்கினால் அது மாற்று கருத்துக்களை உருவாக்கி விடும் என்பதன் காரணமாகவே இலங்கை அரசாங்கம் அதில் தலையிடவில்லை என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
ஏற்கனவே அமெரிக்க யோசனைக்கு ரஸ்யா, சீனா, ஈரான், பாகிஸ்தான், ஐக்கிய அரபு இராச்சியம், இந்தோனேசியா போன்ற நாடுகள் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.

ad

ad