புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 பிப்., 2014

 சிறிலங்காவில் இடம்பெற்ற போர் குற்றங்களை விசாரிக்க ஐக்கிய நாடுகளின் விசேட அதிகாரி நியமனமா? 
சிறிலங்காவில் இறுதிக்கட்ட போரில் இடம்பெற்றதாக கூறப்படும் போர் குற்றங்கள் குறித்து விசாரிக்க விசேட ஐக்கிய நாடுகளின் விசேட அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


பிரித்தானியாவும் அமெரிக்காவும் இணைந்து இந்த அதிகாரியை நியமிக்க செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாகவும். அத்துடன் அமெரிக்காவும் பிரித்தானியாவும் இணைந்து ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் முன்வைக்கும் பிரேரணையின் பிரதான நோக்கம் இந்த விசேட விசாரணையாளரை நியமிப்பதே என ஜெனிவா செய்திகள் தெரிவிக்கின்றன.

வன்னி இறுதிக்கட்ட போரின் இறுதி வாரத்தில் இடம்பெற்ற போர் குற்றங்கள் தொடர்பாக மட்டும் விசாரணை நடத்தும் பொறுப்பு இந்த அதிகாரிக்கு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ad

ad