புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 பிப்., 2014

சிரியா ஜெனீவா பேச்சுவார்த்தை.   முடிவு எதுவும் எட்டப்படாமல் தோல்வியில் முடிவடைந்தது 
சிரியா விவகாரத்தில் ஆக்கபூர்வமான முடிவு எதுவும் எட்டப்படாமல் தோல்வியில் முடிவடைந்தது ஜெனீவா பேச்சுவார்த்தை. எனவே, அடுத்தகட்டப் பேச்சுவார்த்தை திட்டமிட்டபடி பிப்ரவரியில் நடைபெறுமா? என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிரியாவில் அதிபர் பஷார் அல் அஸாதின் அரசு தரப்புக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 2011-ஆம் ஆண்டு மார்ச் மாதம் மோதல் ஏற்பட்டு உள்நாட்டுக் கலவரமாக மாறியது.
இக்கலவரத்தில் இதுவரை 1,30,000 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. பல லட்சக்கணக்கானோர் அண்டை நாடுகளுக்கு புலம் பெயர்ந்து விட்டனர்.
சிரியாவில் நிலவி வரும் உள்நாட்டுக் கலவரத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், ஸ்விட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் கடந்த மாதம் 24-ஆம் தேதி பேச்சுவார்தை தொடங்கப்பட்டது. அப்போது, போர்நிறுத்தம் செய்யப்பட வேண்டுமானால், சிரியா அதிபர் பஷார் அல் அஸாத் பதவி விலக வேண்டும்; இடைக்கால அரசு அமைக்க வேண்டும் என்று கிளர்ச்சியாளர்கள் வலியுறுத்தினர்.
ஆனால், அரசுப் பிரதிநிதிகளோ இதற்கு மறுப்புத் தெரிவித்து விட்டனர். மேலும், அதிபரைப் பற்றி இப்பேச்சுவார்த்தையின்போது விவாதிக்கக் கூடாது என்று கூறிவிட்டனர்.
இதனால், பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்தது. எனவே, ஆக்கபூர்வமான முடிவு எதுவும் எடுக்கப்படாமலேயே முதல்கட்டப் பேச்சுவார்த்தை முடிவடைந்தது.
இப்பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்துள்ள ஐ.நா. மத்தியஸ்தர் பிப்ரவரி 10-ஆம் தேதி 2-வது கட்டப் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இதனிடையே, முதல்கட்டப் பேச்சுவார்த்தையில் ஆக்கபூர்வமான முடிவு எதுவும் எடுக்கப்படாததால், 2-வது கட்டப் பேச்சுவார்த்தை குறித்து சிரியா அதிபர் அஸாத் யோசித்து வருவதாக அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் வாலித் முவாலம் தெரிவித்தார்.
இதனால், 2-வது கட்டப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது 

ad

ad