புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 பிப்., 2014

    ஊழல் புகாரை நிரூபிக்காவிட்டால் பதவி விலக தயாரா .கேஜரிவாலுக்கு கபில் சிபல் சவால்

என் மீதான ஊழல் புகாரை 48 மணி நேரத்தில் நிரூபித்தால் அடுத்த கணமே பதவி விலகுகிறேன்; ஆனால், நிரூபிக்கத் தவறினால் முதல்வர் பதவியிலிருந்து விலகத் தயாரா? என தன் மீது புகார் கூறிய தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு
மத்திய சட்டத் துறை அமைச்சர் கபில் சிபல் சனிக்கிழமை சவால் விடுத்தார்.
தில்லியில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 31) நடைபெற்ற ஆம் ஆத்மி கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டத்தில், "ஊழலில் ஈடுபடுவோர்' எனக் குறிப்பிட்டு சுமார் 30 பேர் கொண்ட பட்டியலை அரவிந்த் கேஜரிவால் வெளியிட்டார். அதில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜி.கே. வாசன், வீரப்ப மொய்லி, கபில் சிபல் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில், அரவிந்த் கேஜரிவால் தன் மீது அவதூறு பரப்புவதாக கபில் சிபல் குற்றம்சாட்டினார். இது குறித்து தில்லியில் அவர் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
"அரவிந்த் கேஜரிவால் எனக்கு எதிராக எந்தப் புகாரை குறிப்பிட்டுக் கூறுகிறார் என்று தெரியவில்லை. எனக்கு எதிராக ஒரேயொரு புகாரை அவர் நிரூபித்தாலும் கூட, நான் அடுத்த கணமே பதவி விலகத் தயாராக இருக்கிறேன். ஆனால், புகாரை நிரூபிக்கத் தவறினால் அரவிந்த் கேஜரிவால் முதல்வர் பதவியிலிருந்து விலகத் தயாரா?
தில்லியில் மீண்டும் உடனடி தேர்தல் வரக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் சிறுபான்மை பலம் கொண்ட ஆம் ஆத்மி கட்சிக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்தது. ஆனால், ஆட்சிக்கு வந்த நாள் முதல் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் எதையும் உருப்படியாக நிறைவேற்ற முடியாது என்பதை அரவிந்த் கேஜரிவால் உணர்ந்துள்ளார்.
அதனால், காங்கிரஸ் கட்சியை வெறுப்புக்குள்ளாக்கி, ஆம் ஆத்மி அரசுக்கு அளித்துவரும் ஆதரவை விலக்கிக் கொள்ள நெருக்குதல் கொடுப்பதே கேஜரிவாலின் நோக்கமாக உள்ளது. அதன் வெளிப்பாடாகத்தான், அண்மையில் கடமை தவறியதாக கூறப்படும் தில்லி காவலர்கள் சிலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வீதியில் அமர்ந்து அவர் தர்னா நடத்தினார். இப்போது, என் மீதும் பிற காங்கிரஸ் அமைச்சர்கள் உள்ளிட்டோர் மீதும் அவதூறாக ஊழல் புகார் சுமத்தியுள்ளார். இதன் மூலம் மீண்டும் காங்கிரûஸ வெறுப்படையச் செய்ய அவர் சூழ்ச்சி செய்கிறார். எனக்கு எதிராக சுமத்திய புகாரை நிரூபிக்க அவருக்கு 48 மணி நேர அவகாசம் அளிக்கிறேன். அவ்வாறு நிரூபிக்கத் தவறினால் கேஜரிவால் உடனடியாக முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும்' என்றார் கபில் சிபல்.

ad

ad