புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 பிப்., 2014

அதிமுகவில் இணைந்தார் பண்ருட்டி ராமச்சந்திரன்

தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலருமான ஜெயலலிதாவை நேரில் சந்தித்து அக்கட்சியில் தம்மை இணைத்துக் கொண்டார் தேமுதிகவின் முன்னாள் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன்.

தமிழக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான பண்ருட்டி ராமச்சந்திரன் திமுகவில் இருந்து விலகி எம்.ஜி.ஆர். தலைமையிலான அதிமுகவில் இணைந்தார்.
பின்னர் பாமக, தனிக் கட்சியெல்லாம் கண்டு கடைசியில் தேமுதிகவில் இணைந்தார்.
தேமுதிகவில் கட்சியின் அவைத்தலைவராகவும் ஆலந்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் இருந்தார்.
அண்மையில் தமது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த கையோடு தேமுதிகவில் இருந்து விலகியதுடன் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்குவதாகவும் அறிவித்தார் பண்ருட்டி ராமச்சந்திரன்.
ஆனால் அவர் அல்லது அவரது மகன் அதிமுகவில் இணையப் போகிறார் என்று அப்போது செய்திகள் வெளியாகின, அதை பண்ருட்டி ராமச்சந்திரன் தொடர்ந்து மறுத்து வந்தார்.
இந்நிலையில் திடீரென பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு தமிழக அரசின் "அண்ணா விருது", முதல்வர் ஜெயலலிதாவால் வழங்கப்பட்டது.
பின்னர் தொடர்ந்து பண்ருட்டி ராமச்சந்திரன் அளித்த பேட்டிகளில் அதிமுகவின் வெற்றிக்கு பாடுபடுவேன் என்று கூறிவந்தார்.
இந்நிலையில் இன்று ஜெயலலிதாவை நேரில் சந்தித்து அதிமுகவில் தம்மை இணைத்துக் கொண்டார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுகவின் வெற்றிக்காக பாடுபடப் போவதாக தெரிவித்துள்ளார்.

ad

ad