புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 பிப்., 2014


ஐடி இளம்பெண் கொலையில் துப்பு கிடைத்தது எப்படி? கொலையாளிகள் பிடிபட்டது எப்படி?
சி.பி.சி.ஐ,டி. ‘ஐ.ஜி’ மகேஷ்குமார் அகர்வால் நேற்று இரவு 10 மணி அளவில், நிருபர்களுக்கு பேட்டி அளீத்தார்.
அப்போது அவர்,   ‘’பெண் என்ஜினீயர்
கொலை செய்யப்பட்ட வழக்கில் கண்காணிப்பு கேமரா, குற்றவாளிகளை பிடிக்க உதவி உள்ளது. கொலையாளிகள் பெண் என்ஜினீயரை கொலை செய்தவுடன் அவர் வைத்து இருந்த வங்கி கிரெடிட் கார்டு மற்றும் செல்போனை பறித்துக்கொண்டு தப்பிச்சென்று உள்ளார்கள். வரும் வழியில் கிரெடிட் கார்டு மூலம் குறிப்பிட்ட வங்கியில் பணம் எடுக்க முயற்சித்து உள்ளனர்.


ஆனால், அவர்களால் பணம் எடுக்க முடியவில்லை. பணம் எடுக்க முயற்சித்தபோது பிடிபட்ட கொலை யாளி உத்தம் மண்டேலின் உருவம் ஏ.டி.எம். மையத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அப்போது உத்தம் மண்டேல் சிவப்பு கலர் சட்டை அணிந்து உள்ளான். அந்த கேமரா காட்சியை வைத்து அந்தப்பகுதியில் உள்ளவர்களிடம் விசாரித்தபோது, எங்களுக்கு துப்பு கிடைத்தது. அதன் அடிப்படையில் குற்றவாளிகளை கைது செய்தோம். கேமராவில் பதிவாகி இருந்த சிவப்பு கலர் சட்டையை குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்து உள்ளோம்.
கொலையாளிகள் பெண் என்ஜினீயர் வேலைபார்த்த நிறுவனத்தில் இருந்து 700 மீட்டர் தொலைவில் வைத்து அவரை கடத்திச் சென்றுள்ளனர். 13–ந்தேதி அன்று இரவே பெண் என்ஜினீயரை கொலை செய்துவிட்டனர்.
இந்த வழக்கில் துப்பு துலக்க 170 போலீசார் பயன்படுத்தப்பட்டனர். பரிசுத்தொகை ரூ.2 லட்சத்தையும் யாரிடம் கொடுப்பது என்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. அது ரகசியமானது. வழக்கு விசாரணை முடிந்த பிறகு முழுவிவரமும் தெரிவிக்கப்படும்.
கைதான குற்றவாளிகள் மேற்கு வங்காள மாநிலம் மால்டா மாவட்டத்தை சேர்ந்தவர்கள். அவர்களில் உத்தம் மண்டேல் திருமணம் ஆனவர். அவரது மனைவி சொந்த ஊரில் இருக்கிறார். இவர்கள் வேறு ஏதாவது இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டு உள்ளார்களா என்பது பற்றி விசாரித்து வருகிறோம்.
சிறுசேரி சிப்காட் வளாகத்தில் பாதுகாப்பு ஏற்பாடு பலப்படுத்தப்பட்டுள்ளது. அங்குள்ள நிறுவனங்களில் வேலைபார்க்கும் காவலர்களோடு சேர்த்து போலீசாரும் ரோந்து சுற்றிவர ஏற்பாடு செய்துள்ளோம்.
அந்தப்பகுதியில் உள்ள புதர்களை அகற்றிவிட்டு இருட்டுப்பகுதியில் விளக்குகளை எரிய விடவும் கேட்டு ள்ளோம். அங்குள்ள பெரும்பாலான கம்பெனிகளில் முன் வாசல் கேட் இல்லை. இனிமேல் முன் வாசலில் கேட் பொருத்த கேட்டுள்ளோம்.


கண்காணிப்பு கேமராக்களை பொருத்தவும் வலியுறுத்தியுள்ளோம். அந்தப்பகுதியில் வேலைபார்க்கும் வெளிமாநிலத்தவர்களின் பட்டியலை அவர்கள் வேலைபார்க்கும் நிறுவனத்தினர் புகைப்படத்தோடு சேகரி த்து வைக்கும்படியும் அறிவுறுத்தியுள்ளோம்’’என்று தெரிவித்தார்.

ad

ad