புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 பிப்., 2014

இராணுவத்தினரை சம்பந்தன் வெளியேற சொல்கிறார்! மீள்குடியேற்ற அமைச்சர் குற்றச்சாட்டு
வடக்கு கிழக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் அப்பகுதிகளில் இருந்து வெளியேற வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் அரசிற்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றார். இவ்வாறு மீள்குடியேற்ற அமைச்சர் குணரத்ன வீரக்கோன் குற்றம்சாட்டியுள்ளார்.
வாகரை பிரதேசம் புணானை கிழக்கில் பிரதேச செயலாளர் எஸ்.ஆர். இராகுலநாயகி தலைமையில் இன்று இடம்பெற்ற மீள்குடியேற்ற நிகழ்வின் போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர்,
வடக்கு கிழக்கில் முகாமிட்டுள்ள இராணுவத்தினர் அப்பகுதிகளில் இருந்து வெளியேற வேண்டும் என்று இரா. சம்பந்தன் அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுக்கின்றார்.
ஆனால் இராணுவமோ அப்பகுதிகளில் உள்ள மக்களுக்கான பல்வேறுபட்ட உதவிகளை வழங்கி வருகிறது.
எமது அமைச்சினால்; 3 இலச்சம் ரூபா பெறுமதியான வீடுகளை கட்டுவதற்கான நிதி உதவி; வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால் சம்பூர் போன்ற இடங்களில் இராணுவத்தினர் 10 லட்சம் ரூபா பெறுமதியான வீடுகளைக் கட்டிக் கொடுத்து மக்களுக்கான உதவிகளை செய்து வருகின்றனர்.
மக்களுக்காக ஒன்றிணைந்து வேலை செய்வோம் வாருங்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவருக்கு அழைப்பு விடுத்திருந்தேன்.
ஆனால் அதற்கு அவர் சம்மதம் தெரிவிக்கவில்லை என்றார்.

ad

ad