புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 பிப்., 2014

த.தே.கூ முன் நிபந்தனையின்றி வந்தால் மட்டுமே தீர்வு குறித்து பேசலாம்: பசில்
தமிழ்க் கூட்டமைப்பினர் முன் நிபந்தனை விதிக்காமல் பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வரவேண்டும் என்று அமைச்சர் பசில் ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கு எவ்வாறான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதோ அது போன்ற அதிகாரங்களையே இலங்கையிலும் எதிர்பார்க்கிறோம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் இந்தியாவில் தெரிவித்துள்ளமை குறித்து வினவியபோதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அமைச்சர் பஷில் ராஜபக்ஷ மேலும் குறிப்பிடுகையில்,
இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை போன்றே இலங்கைக்கும் கோருவதாக கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார். அதேபோன்று நாட்டில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் வெவ்வேறு விதமான யோசனைகளை அரசியல் தீர்வுத்திட்டத்துக்காக முன்வைத்துவருகின்றன.
எனவே அனைத்து கோரிக்கைகள் மற்றும் யோசனைகள் தொடர்பில் பாராளுமன்றத் தெரிவுக்குழுவிலேயே கலந்துரையாடி தீர்மானம் ஒன்றை எடுக்க முடியும்.
எனவே தமிழ்க் கூட்டமைப்பினர் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் இணைந்துகொண்டு தமது நிலைப்பாட்டையும் யோசனையையும் முன்வைக்க முடியும். 
குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தமக்கு தேவையான அதிகாரங்கள் தொடர்பில் வெளியில் இருந்து கூறிக்கொண்டிருப்பதைவிட பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வந்து கூறுவதே பொருத்தமானதாக அமையும்.
ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு முன் நிபந்தனை விதிக்காமல் வரவேண்டும். முன்நிபந்தனைகளை விதிப்பானது அனைத்து செயற்பாடுகளிலும் சிக்கலை ஏற்படுத்திவிடும் என்றார்.

ad

ad