புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 பிப்., 2014


காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேருவதற்கு யாரும் தயாராக இல்லை: பொன். ராதாகிருஷ்ணன் பேச்சு
தமிழ்நாட்டில் பாரதீய ஜனதாவுக்கு வாக்கு வங்கி அதிகரித்துள்ளது என்று கூடுவாஞ்சேரியில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் பா.ஜ.க மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார்.


சென்னையை அடுத்த வண்டலூர் அருகே 8ந் தேதி பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் மோடி மற்றும் தமிழ்நாட்டில் பாரதீய ஜனதா கூட்டணியில் இடம் பெறும் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டு பேசும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு கூடுவாஞ்சேரியில் காஞ்சீபுரம் மாவட்ட பா.ஜ.க செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:–
காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேருவதற்கு யாரும் தயாராக இல்லை. அந்த கட்சி வீழ்ந்து விட்டது. உலக அளவில் பாரதீய ஜனதாவை உயர்த்தி காட்டுவோம். இந்தியாவின் பிரதமராக நரேந்திரமோடி பதவி ஏற்பது உறுதியாகும்.
ஜூலை மாதம் இதே வண்டலூரில் மோடியை வரவேற்று வெற்றி விழா கொண்டாடுவோம். தமிழ்நாட்டில் முதன் முறையாக ஒரு தேசிய கட்சி வலுவான கூட்டணி அமைத்துள்ளது என்று பா.ஜ.க. நிரூபித்துள்ளது. தேர்தலுக்கு முன்பு அனைத்து கூட்டணி கட்சியினரையும் அழைத்து பொதுக்கூட்டம் நடத்துவது இதுதான் முதல் முறையாகும். முக்கிய கட்சிகள் உடன் கூட்டணி குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
எந்த கட்சிகளுடன் கூட்டணி என்பது 8ந் தேதி அனைவருக்கும் தெரிந்துவிடும். தமிழ்நாட்டில் தற்போது பாரதீய ஜனதாவின் வாக்கு வங்கி அதிகரித்துள்ளது. இந்தியா முழுவதும் மோடி அலை வீசுகிறது.இவ்வாறு அவர் பேசினார்.

ad

ad