புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 பிப்., 2014

ஒரு புறம் குடி, மறுபுறும் சீட்டாட்டம்: களைகட்டிய திமுக மாநாடு

திருச்சியில் துவங்கிய திமுக வின் பத்தாவது மாநில மாநாட்டில், தலைவர்கள் பேசுவதை கேட்காமல், மாநாடு திடலில், மது அருந்துவது, சீட் விளையாடுவது போன்ற நடவடிக்கைகளில் தொண்டர்கள் ஈடுபட்டனர்.

திருச்சியில் திமுகவின், பத்தாவது மாநில மாநாடு நேற்று துவங்கியது. முதல் நாளான காலை, மாநாடு வளாகம் முன் திமுக தலைவர் கருணாநிதி, ராமஜெயம் நினைவுக் கொடி கம்பத்தில் கொடியேற்றி மாநாட்டை துவக்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து மறைந்த தலைவர்களின் படங்களை திமுக நிர்வாகிகள் திறந்து வைத்து மாநாட்டில் பேசினர்.
அப்போது, மாநாடு திடலில் தொண்டர்கள் கூட்டம் குறைவாக இருந்தது. போடப்பட்ட சேர்கள் காலியாக இருந்த நிலையில், தொண்டர்கள் மணல் கொட்டப்பட்ட தரையில் அமர்ந்து ’சீட்' விளையாடிக் கொண்டிருந்தனர். மாநாடு வளாகத்தில் பல பகுதிகளில் தொண்டர்கள் அமர்ந்து தாராளமாக மது அருந்தினர். இதை யாரும் கண்டுகொள்ளவில்லை.
கரகாட்டம்- நாட்டுப்புறப்பாடலுடன்: திமுகவை பொறுத்தவரை, மாநாட்டில் கட்சியினர் பல்வேறு தலைப்புகளில் பேசுவர். இதைக் கேட்க தொண்டர்கள் ஆர்வமாக இருப்பர். ஆனால், இன்று நடந்த மாநாட்டில் தொண்டர்களின் நிலைமை வேறு விதமாக இருந்தது.
கலை நிகழ்ச்சி, புகழ்பெற்ற கரகாட்டம் என பல்வேறு கலைநிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. எல்.இ.டி., "தொலைக்காட்சி' மூலம் மேடை நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டது. இதை தொண்டர்கள் பொருட்படுத்தாமல், கேளிக்கை விளையாட்டுகளில் ஈடுபட்டிருந்தனர். பெண் தொண்டர்கள் மாநாடு நடந்த பகுதிகளில் தூங்கி கொண்டிருந்தனர்.
மாநாடு வளாகத்தில், நிறைய வாகனங்கள் காணப்பட்டன. ஆனால், தொண்டர்கள் இல்லாததால், மாநாட்டு வெளிப்புற வளாகப் பகுதிகள் வெறிச்சோடி இருந்தது. மாநாட்டுக்குச் செல்ல ஆண்களுக்கு, 50 ரூபாயும், பெண்களுக்கு, 20 ரூபாய் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.
ஆனால், பெரும்பாலான தொண்டர்கள் கட்டணம் செலுத்தி, நுழைவுச்சீட்டு பெறாமல் சென்றனர்.
மாநாடு வளாகத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு வசதியாக, கழிப்பிட வசதி செய்யப்பட்டிருந்தது. முதல் நாள் மாநாட்டுக்கு, வந்த தொண்டர்கள், மது அருந்தி விட்டு, சீட் விளையாடிக் கொண்டு சுற்றுலாத்தலம் போல், ஜாலியாக பொழுதைக் கழித்தனர். இச்சம்பவத்தால், அந்த வழியாக திமுக பெண் தொண்டர்கள் முகம் சுளித்தபடிச் சென்றனர்.
போக்குவரத்து நெரிசல்: காலை, 8 மணி முதல், பல்வேறு மாவட்டங்களில் இருந்து தொண்டர்கள், வேன், கார் மூலம் திருச்சிக்கு வந்தப்படி இருந்தனர்.
மாநாட்டு திடல் அமைக்கப்பட்டுள்ள திண்டுக்கல் ரோட்டில், ஏராளமான வாகனங்கள் அணிவகுத்துச் சென்றன.
மேலும், அந்த வழியாக திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்களும் சென்றதால், கருமண்டபம் முதல், தீரன் நகர் வரை, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆனால், போக்குவரத்தை சரிசெய்ய போதிய பொலிசார் இல்லாததால், கருமண்டபம் பகுதியை, ஒரு வாகனம் கடக்க அரைமணி நேரம் ஆனது. நேரம் செல்ல செல்ல, போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகமானது.

ad

ad