புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 பிப்., 2014


காலில் விழுந்து தற்கொலை மிரட்டல் விடுத்த இளம்பெண்! கலெக்டர் அவசரமாக காரில் ஏறி சென்றதால் பரபரப்பு!
 


முத்துப்பேட்டை அடுத்த தம்பிக்கோட்டை கீழக்காடு பகுதியைச் சேர்ந்தவர் வைரமணி. இளம்பெண்ணான இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. பட்டப்படிப்பு முடித்துள்ளார். தனது சகோதரி
அஞ்சலி தஞ்சையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் படித்து வருகிறார். அவருக்கு தேவைக்காக வருமானச் சான்று வாங்க முத்துப்பேட்டையில் உள்ள துறைக்காடு கிராம நிர்வாக அலுவலர் சிங்காரவேலுவிடம் பலமுறை அலைந்துள்ளார். உதவியாளர்கள் பணம் கேட்டு தொந்தரவு செய்ததாகவும் மீண்டும் மீண்டும் முறையான ஆவணங்களை கொண்டு வரும்படி அலைகழிக்க விடுதால் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்த அவர் புதன்கிழமை முத்துப்பேட்டை அடுத்த இடும்பாவனத்தில் நடந்த மக்கள் நேர்காணல் முகாமிற்கு முன்னதாகவே வந்திருந்தார்.

நிகழ்ச்சி நடக்கும் மண்டபம் வாசலில் மாவட்ட ஆட்சியர் நடராஜன் வருகைக்காக காத்து நின்ற இளம்பெண் வைரமணி, ஆட்சியர் நடராஜன் நிகழ்ச்சி முடிந்து திரும்பிய நேரத்தில் அவரது காலில் விழுந்து கதறி அழுதார். எனக்கு வருமானச் சான்று தர அதிகாரிகள் மறுக்கிறார்கள் என்றும் சத்தம் போட்டார்.
இதனை சற்றும் எதிர்பார்க்காத ஆட்சியர் நடராஜன் நிலை தடுமாறி இளம்பெண் வைரமணியிடம் எதையும் கேட்காமல் வேகமாக நடந்து போய் காரில் ஏறி சென்றார். இதனால் ஆத்திரம் அடைந்த வைரமணி சான்று கேட்டு அதிகாரிகளிடம் பலமுறை அலைந்தேன். இப்ப நியாயம் கேட்டு ஆட்சியரிடம் முறையிட்டேன். ஆனால் ஆட்சியர் கண்டுகொள்ளாமல் போகிறார். அதனால் நான் தற்கொலை செய்து கொள்வதை விட வேற எதுவும் இல்லை என்றும், நான் தற்கொலை செய்துகொள்ள போகிறேன் என்று கொலை மிரட்டல் விடுத்து சத்தம் போட்டார். அப்பொழுது இளம்பெண் வைரமணியை தனி வட்டாட்சியர் மலர்கொடி, ஊராட்சிமன்ற தலைவி அமுதாமனோகரன் ஆகியோர் சமாதானம் செய்தனர்.
ஆனாலும் இளம்பெண் வைரமணி அரசு முகாம் என்ற போலி முகாம் நடத்துகிறார்கள். மக்களுக்கு இங்கே சேவை செய்யல தொந்தரவுதான் செய்கிறார்கள். எந்தவொரு சான்று வாங்க சென்றாலும் பணத்தைத்தான் முதலில் பார்க்கிறார்கள். நாங்கள் வங்கியில் கடன் வாங்கி பட்டப்படிப்பு படிக்கிறோம். ஆனால் முறையாக சம்பளம் வாங்கும் எந்த அதிகாரியும் முறையாக நடப்பதில்லை என்று சரமாரி புகார்களை கூறி தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தார். அப்பொழுது ஆர்.டி.ஓ.சுப்பு, தாசில்தார் ராஜகோபால், வருவாய் ஆய்வாளர் ராமச்சந்திரன் ஆகியோர் இளம்பெண் வைரமணிக்கு சான்றை உடன் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இளம்பெண் வைரமணி கலெக்டர் நடராஜன் காலில் விழுந்து  தற்கொலை மிரட்டல் விடுத்து கதறி அழுத சம்பவம் முத்துப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ad

ad