புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 பிப்., 2014

அடுத்த பிரதமர் யார் என்பதை இப்போது விவாதிப்பது அர்த்தமற்றது : ஜெயலலிதா பேட்டி
மக்களவை தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் சேர்ந்து அதிமுக போட்டியிடுகிறது.  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் நேற்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை
போயஸ்கார்டனில் சந்தித்து பேசி கூட்டணியை உறுதி செய்தனர்.


இந்நிலையில் இன்று மார்க்சிஸ்ட் தலைவர்கள் போயஸ்கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்து பேசினர்.
மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் பிரகாஷ்காரத், தமிழ்மாநிலச்செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோ ருடன்  நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்தார் ஜெயலிதா.  அருகில் பிரகாஷ்காரத் இருந்தார்.
அப்போது ஜெயலலிதா மற்றும் பிரகாஷ்காரத்திடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகள் எழுப்பிய வண்ணம் இருந்தனர்.  அதற்கு ஜெயலலிதா,   ’அதிமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சி இணைந்துள்ளது.  கூட்டணியில் வேறு கட்சிகள் இடம்பெறுவது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.  அடுத்த பிரதமர் யார் என்பதை இப்போது விவாதிப்பது அர்த்தமற்றது’’ என்று தெரிவித்தார்.
பிரகாஷ்காரத்,  ‘’மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணி தமிழகத்தில் அதிக இடங்களில் வெற்றி பெறும்’’ என்று நம்பிக்கை தெரிவித்தார்.

ad

ad