புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 பிப்., 2014

ஜனாதிபதி ஆணைக்குழு மாவட்ட செயலகத்திற்கு விஜயம்; சாட்சியப்பதிவுகள் குறித்தும் கலந்துரையாடல் 
யாழ். மாவட்டத்தில் காணாமற்போனவர்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வது குறித்த கலந்துரையாடல் ஒன்று இன்று காலை 9.30 மணிக்கு யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.


அதன்படி யாழ். மாவட்ட செயலகத்திற்கு விஜயம் மேற்கொண்ட காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கும் மேலதிக அரசாங்க அதிபர், சாவகச்சேரி பிரதேச செயலர் மற்றும் கோப்பாய் பிரதேச செயலர் ஆகியோருக்கும் இடையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இது குறித்து மேலதிக அரச அதிபர் ரூபினி வரதலிங்கம் தெரிவிக்கையில்,

வடக்கில் ஏற்பட்டிருந்த யுத்தத்தின் போது காணாமல் போனவர்கள் மற்றும் இறுதிக்கட்ட யுத்தத்தில் சரணடைந்து காணாமல் போனவர்கள் குறித்து உறவினரிடம் இருந்து சாட்சியப்பதிவுகள் பெறும் நடவடிக்கையினை ஜனாதிபதி ஆணைக்குழு செயற்படுத்தி வருகின்றது.

அதன்படி எதிர்வரும் 14,15,16,17ஆம் திகதிகளில் யாழ்.மாவட்டத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பிலான பதிவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

அந்தவகையில் எதிர்வரும் 14ஆம் திகதி கோப்பாய் பிரதேச செயலகத்திலும் , 15 ஆம் திகதி சாவகச்சேரி பிரதேச செயலகத்திலும் 16,17ஆம் திகதி மாவட்டச் செயலகத்திலும் நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்கான ஏற்பாடுகள் தொடர்பிலான கலந்துரையாடலே இன்று இடம்பெற்றது. அதன்படி ஏற்பாடுகளை முகாமைத்துவ உதவியாளர்கள் மேற்கொள்ளவுள்ளனர்.

மேலும் காணாமல்போனவர்களது உறவினர்கள் பதிவுக்கு வரும்போது ஏற்கனவே முறைப்பாடு செய்யப்பட்ட பிரதிகளை எடுத்து வரவேண்டும் என்றும் காலை 9 மணி முதல் மாலை 5.30 மணிவரை விசாரணைப்பதிவுகள் நடைபெறும் எனவும்அவர் தெரிவித்தார்.

இதேவேளை, கிளிநொச்சி மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் விசாரணைப்பதிவுகள் முடிவடைந்த நிலையில் எதிர்வரும் வாரம் யாழ்ப்பாணத்திலும் விரைவில் முல்லைத்தீவிலும் நடாத்த திட்டமிட்டுள்ளதாக ஆணைக்குழு தகவல்கள் தெரிவிக்கின்றன.

ad

ad