புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 பிப்., 2014

    இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவராக "ஸ்குவாஷ்' ராமச்சந்திரன் தேர்வு

உலக ஸ்குவாஷ் கூட்டமைப்பின் தலைவரான ராமச்சந்திரன் (படம்), இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (ஐஓஏ) தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் சீனிவாசனின் இளைய சகோதரர் ஆவார்.

சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் உத்தரவின்படி இந்திய ஒலிம்பிக் சங்க பிரதிநிதிகள் நியமனத்துக்கான தேர்தல் ஞாயிற்றுகிழமை நடைபெற்றது. இதனால், 14 மாதங்களுக்குப் பின் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை விரைவில் ரத்து செய்யப்படும் சூழல் உருவாகி உள்ளது.
சர்வதேச ஒலிம்பிக் சங்க விதிமுறைகளைப் பின்பற்றாமல் குற்றப் பின்னணி உள்ளவர்களைத் தேர்தலில் போட்டியிட அனுமதித்ததற்காக 14 மாதங்களுக்கு முன் ஐஓஏ சஸ்பெண்ட் செய்யப்பட்டது. இதனால், சோச்சி ஒலிம்பிக்கில் இந்திய வீரர்கள் நம் தேசியக் கொடியின் கீழ் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டது.
இதற்கிடையே ஐஓசி உத்தரவுப்படி தேர்தலை நடத்துவதாக ஐஓஏ தெரிவித்தது. அதன்படி ஞாயிற்றுக்கிழமை ஐஓஏ அமைப்பின் பல்வேறு பொறுப்புகளுக்கான தேர்தல் நடைபெற்றது. ஐஓஏ தலைவர் பதவிக்கு ராமச்சந்திரன் மட்டுமே வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். வேறு யாரும் போட்டியிட முன்வராததால் ராமச்சந்திரன் போட்டியின்றி ஐஓஏ தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதேபோல இந்திய கோகோ கூட்டமைப்பின் தலைவர் ராஜீவ் மேத்தா பொதுச் செயலாளராகவும், இந்திய டென்னிஸ் சங்கத் தலைவர் அனில் கன்னா பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இது தவிர, மூத்த துணைத் தலைவர், ஆறு இணைச் செயலர்கள் மற்றும் ஒன்பது செயற்குழு கவுன்சில் உறுப்பினர்கள் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
துணைத் தலைவர் பதவிக்கு 9 பேர் போட்டியிட்டனர். இதில் 8 பேர் தேர்வு செய்யப்பட்டனர். ஐஓசி நியமித்த 3 கண்காணிப்பாளர்கள் முன்னிலையில் இத்தேர்தல் நடந்தது.
தேர்தல் முடிந்த பின் ஐஓசி தேர்தல் கண்காணிப்பாளர் ராபின் மிச்செல் கூறுகையில், ""தேர்தல் சிறப்பாக நடைபெற்றதில் மகிழ்ச்சி. இந்த அறிக்கை சோச்சியில் உள்ள ஐஓசி தலைவரிடம் திங்கள்கிழமை சமர்ப்பிக்கப்படும். இந்த தேர்தல் முடிவுகள் மீது விரைவில் செயற்குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்'' என்றார்.
இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் மீதான சஸ்பெண்ட் விரைவில் ரத்து செய்யப்பட்டால், சோச்சி ஒலிம்பிக் நிறைவு நாளன்று வீரர்கள் இந்திய தேசியக் கொடியின் கீழ் பங்கேற்க முடியும்.

ad

ad