புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 பிப்., 2014

பேரறிவாளன், முருகன், சாந்தன் விடுதலை : ஜெயலலிதா அறிவிப்பு
முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரையும் விடுதலை செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.முன்னாள் பிரதமர் ராஜிவ், 1991ல், ஸ்ரீபெரும்புதூரில், லோக்சபா தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்தபோது, மனித வெடிகுண்டு
தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகிய நான்கு பேருக்கும், சுப்ரீம் கோர்ட், தூக்கு தண்டனையை உறுதி செய்தது. பின், நளினிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.


இதையடுத்து, 2000ம் ஆண்டில், முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூன்று பேரும், தூக்கு தண்டனை யை குறைக்க கோரி, ஜனாதிபதியிடம், கருணை மனு தாக்கல் செய்தனர்.ஆனால், இவர்களின் மனுக்கள் கிடப்பில் போடப்பட்டன. மூன்று பேரும், இது தொடர்பாக, ஜனாதிபதிக்கு, நினைவூட்டல் கடிதங்களை, தொடர்ந்து அனுப்பி வந்தனர்.
இந்நிலையில், 11 ஆண்டு தாமதத்துக்கு பின், 2011ல், இவர்களின் கருணை மனுக்களை, அப்போது ஜனாதிபதியாக இருந்த, காங்., கட்சியைச் சேர்ந்த, பிரதிபா பாட்டீல் நிராகரித்தார். இதையடுத்து, 2011, செப்டம்பர், 11ல், இவர்களுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற உத்தரவிடப்பட்டது.
இதற்கிடையே, கருணை மனுக்கள் தாமதமாக பரிசீலிக்கப்பட்டதால், தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை, குறைக்க கோரி, மூன்று பேரும், சென்னை ஐகோர்ட்டில், வழக்கு தொடர்ந்தனர். இதை விசாரித்த ஐகோர்ட், தூக்கு தண்டனையை நிறைவேற்ற, இடைக்கால தடை விதித்தது.
இந்த வழக்கின் விசாரணை, சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. தலைமை நீதிபதி, பி.சதாசிவம் தலைமையிலான, 'பெஞ்ச்' இந்த வழக்கை விசாரித்தது. மத்திய அரசு, தன் வாதத்தில், 'இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை குறைக்க முடியாது; தண்டனையை குறைக்க கூடிய குற்றத்தை, அவர்கள் செய்யவில்லை.

தண்டனை காலத்தில், சிறையில், அவர்கள் மகிழ்ச்சியாகவே இருந்தனர்; உயர் கல்வியும் கற்றனர். சிறையில், எந்தவித சித்ரவதை, துன்பத்தையும், அவர்களுக்கு அளிக்கவில்லை' என, தெரிவிக்கப்பட்டது. குற்றவாளிகள் தரப்பு, இதை மறுத்தது. 'கருணை மனு பரிசீலனை தாமதமானதால், மனவேதனை உட்பட, பல்வேறு வேதனைகளை, அனுபவித்தோம்' என, அவர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, சந்தன கடத்தல் வீரப்பன் கூட்டாளிகள், நான்கு பேர் உட்பட, 15 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை, கருணை மனுக்கள் தாமதமாக பரிசீலிக்கப்பட்டதற்காக, ஆயுள் தண்டனையாக குறைத்து, சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. எனவே, ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களும், தூக்கிலிருந்து தப்பிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக கருதப்பட்டது.  இருதரப்பு வாதமும் முடிவடைந்த நிலையில், கடந்த 4ல், தேதி குறிப்பிடப்படாமல், தீர்ப்பை, நீதிபதிகள் ஒத்திவைத்தனர். தலைமை நீதிபதி பி.சதாசிவம், நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், எஸ்.கே.சிங் ஆகியோர் அடங்கிய 'பெஞ்ச்', நேற்று தீர்ப்பளித்தது.


தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நான்கு பேரும், சிறையில் எவ்வித துன்பத்திற்கும், சித்ரவதைக்கும் ஆளாகவில்லை என்றும், மகிழ்ச்சியாக இருந்தனர் என்றும், மத்திய அரசு தரப்பில் கூறும் வாதத்தை, நாங் கள் ஏற்கவில்லை.
23 ஆண்டுகளாக, சிறையில் இருப்பவர்களின் மனம், எந்த அளவுக்கு வேதனைப்படும் என்பதும், அவர் களுக்கு ஏற்படும் துன்பமும், அனைவருக்கும் தெரியும். கருணை மனு பரிசீலனை தாமதமாவது குறித்து, மூன்று பேரும், பலமுறை ஜனாதிபதிக்கு கடிதங்களை எழுதியுள்ளனர். மூன்று பேரும், துன்பம் அனுபவித்து வந்தனர் என்பது, இதில் தெரிகிறது. எனவே, கருணை மனு தாமதமாக பரிசீலிக்கப்பட்ட காரணத்தை அடிப்படையாக வைத்து, இவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை, ரத்து செய்வதோடு, ஆயுள் தண்டனையாகவும் குறைக்கப்படுகிறது.
இனியாவது, தூக்கு தண்டனை கைதிகளின், கருணை மனுக்களை கையாளும் விஷயத்தில், மத்திய அரசு, ஒழுங்குமுறையை பின்பற்ற வேண்டும். கருணை மனு பரிசீலனை குறித்து, ஜனாதிபதிக்கு, குறித்த காலத்தில் ஆலோசனை வழங்க வேண்டும். கருணை மனுக்கள், இனியாவது, மிக வேகமாக பரிசீலிக் கப்படும் என, நம்புகிறோம்.
முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூன்று பேரும், 23 ஆண்டுகளாக சிறையில் இருப்பதால், அவர்களை விடுதலை செய்வது குறித்து, மாநில அரசு முடிவு செய்யலாம்’’என்று நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர்.
'ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூன்று பேரும், 23 ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளதால், குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு, 432 மற்றும் 433ன் படி, மாநில அரசு, தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, அவர்களை விடுதலை செய்வது குறித்து முடிவு செய்யலாம்' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

இதையடுத்து இன்று தமிழக சட்டப்பேரவை கூடியதும்,  முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகியோர் விடுதலை செய்யப்படுவார்கள் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

ad

ad