புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 பிப்., 2014

நுவரெலியாவில் கடும் பனிப் பொழிவ
நுவரெலியாவில் தற்பொழுது நிலவும் கடும் குளிருடன் கூடிய காலநிலை காரணமாக அதிகாலையில் பனிப் பொழிவு ஏற்படுவதாக மாவட்ட செயலாளர் டி.பி.ஜி. குமாரசிறி தெரிவித்தார்.
இதன் காரணமாக நுவரெலியாவின் அழகை காண வருமாறு, அவர் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
நுவரெலியா மாவட்டத்தில் தற்போது 5 முதல் 6 செல்சியஸ் பாகை வெப்ப நிலை நிலவுகிறது. இதனால் அங்கு கடும் குளிருடன் கூடிய காலநிலை நிலவுகிறது.
இந்த காலநிலை காரணமாக நுவரெலியாவின் வரலாற்றில் என்றுமில்லாத அளவின் அதன் அழகு அதிகரித்துள்ளதாகவும் மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் இந்த காலநிலையால், மாவட்டத்தின் மேற்கொள்ளப்படும் காய்கறி பயிர் செய்கைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

ad

ad