புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 பிப்., 2014

சிறிலங்கா மீது அதிக அழுத்தம் கொடுத்தால் எதிர்விளைவுகளே ஏற்படும் – ரவூப் ஹக்கீம் எச்சரிக்கை

பொறுப்புக்கூறும் விவகாரத்தில் சிறிலங்கா அரசாங்கம் மீது அனைத்துலக சமூகம் அதிக அழுத்தங்களை கொடுத்தால், அது எதிர் விளைவுகளையே ஏற்படுத்தும் என்று, சிறிலங்காவின் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். 

நேற்று கொழும்பில் நடந்த தென்னாபிரிக்கத் தூதுவருடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அனைத்துலக சமூகம் சுமத்தும் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதற்கும், அனைத்து இன மக்களினதும் மனிதஉரிமைகளை உறுதிப்படுத்துவதற்கும் சிறிலங்கா அரசாங்கம் தயாராகி வருகிறது.

உள்ளக செயல்முறைகளின் மூலம் உண்மையைக் கண்டறிந்து, நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சியில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச ஆர்வமாக இருக்கிறார்.

பொறுப்புக்கூறல் விவகாரத்தில், சிறிலங்கா மீது கொடுக்கப்படும் மிகையான அழுத்தங்கள் எதிர்விளைவுகளை ஏற்படுத்தலாம்.

அது நல்லிணக்க முயற்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், இனங்களுக்கு இடையிலான விரிசலை அதிகரிப்பதாகவும் அமையலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சந்திப்பில், தென்னாபிரிக்கா பாணியிலான உண்மை கண்டறியும் ஆணைக்குழுவொன்றை உருவாக்குவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்போது, கருத்து வெளியிட்ட தென்னாபிரிக்கத் தூதுவர், சிறிலங்கா பிரச்சினைகளுக்கு உள்நாட்டில் காணப்படும் தீர்வே சிறந்தது என்றும், மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்து உள்நாட்டுப் பொறிமுறை மூலம் விசாரணை நடத்துவதே நல்லது என்றும் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், இத்தகைய உள்ளக விசாரணை நடத்தப்படும் போது, அதற்குச் சமாந்தரமாக, பிரச்சினையுடன் தொடர்புடைய சகல தரப்பினருடனும் அரசியல் தீர்வுக்கான பேச்சுக்கள் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்

ad

ad