புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 பிப்., 2014


விசா நிராகரிப்பு - வீடியோ கொன்பிரன்ஸ் மூலம் யாழ். பெண்கள் அமைப்புடன் பேசிய கத்தரின் ருசெல்

அமெரிக்க அரசின் சிறப்புத் தூதுவரான கத்தரின் ருசெல் இலங்கை வருவதற்கு இலங்கை அரசு அனுமதி வழங்கவில்லை. இந்தநிலையில் அவர் அதிரடியாக வீடியோ மூலம் யாழில் பெண்கள் அமைப்புடன் கலந்துரையாடியுள்ளார்.
இந்த கலந்துரையாடலில் அவர் தெரிவித்ததாவது:
இலங்கையில் பாலியல் துஷ்பிரயோக வழக்குகள் தொடர்பான விசாரணைகளில் நீண்ட தாமதம் காணப்படுகின்றது.
அமெரிக்கா இலங்கைக்கு உதவ வேண்டும் என்பதிலிருந்து விலகி இருக்க முடியாது. எதனையும் விமர்சனம் செய்வது எனது வழக்கமல்ல. சிலர் தமது இலங்கைக்கான வருகை, விமர்சனங்கள் தெரிவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதென அபிப்பிராயம் தெரிவித்துள்ளனர். ஆனால் அது தனது நோக்கமாக இருந்ததில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
அவரது உரையைக் கேட்பதற்கு உள்ளூர் பெண்கள் உரிமைக்கான அமைப்பினரும், சிவில் சமூகத்தினரும் கூடியிருந்தனர்.
2009 ம் ஆண்டிலிருந்து அமெரிக்கா இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகின்றது. பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதில் அமெரிக்கா உள்ளூர் அமைப்புக்களுடன் இணைந்து பணியாற்றி வருகின்றது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் பெண்கள் நலத்திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றி வைப்பதற்கென 40 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அமெரிக்காவினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இலங்கைக்கான தமது வருகையின் போது ஒபாமா நிர்வாகத்தினால் உலகளாவிய ரீதியில் ஊக்கமளிக்கப்படும் சமாதானம், அபிவிருத்தி, பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றைப் பெண்களின் பங்களிப்புடன் மட்டுமே அடைய முடியும் என்ற கருத்தை எடுத்துச் செல்வதும் தமது நோக்கமாக இருந்ததாக அவர் தெரிவித்தார்.
மேலும் அண்மையில் இலங்கைக்கு வருகை தந்த தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச்செயலர் நிஷா தேசாய் பிஸ்வால் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாகவும் அவர் எடுத்துரைத்தார்.
இலங்கையில் சட்டம் மற்றும் ஒழுங்கு ஆகியவற்றில் நிலவும் குறைபாடுகள், பாலியல் துஷ்பிரயோக வழக்குகளில் அரச வழக்குத் தொடுநர் தரப்பின் மெத்தனப் போக்கு, வன்புணர்வு மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்கு விசாரணைகளில் ஏற்படும் நீண்ட தாமதம் என்பவை தொடர்பாகவும் அவர் தமது கருத்துக்களை வெளியிட்டார்.
அத்துடன் இலங்கையில் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் கற்பழிப்புச் சம்பவங்கள் அதிகரித்துக் காணப்படுவதாகத் தெரிவித்த அவர் இவற்றைத் தடுப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட வேண்டுமெனவும் தெரிவித்தார்.
கொழும்பு, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களைச் சேர்ந்த சிவில் சமூகத்தின் பிரதிநிதிகளும், பெண்கள் உரிமை அமைப்புக்களும் தமது கருத்துக்களை அவரிடம் தெரிவிப்பதற்கான சந்தர்ப்பமும் வழங்கப்பட்டது.
இதில் மோதல்கள் ஓய்ந்த பின்னர் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பாக எடுத்துக் கூறப்பட்டது.
மேலும் வடக்கில் இராணுவமயப்படுத்தலைக் குறைக்க வேண்டும். போரால் பாதிக்கப்பட்ட விதவைப் பெண்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட வேண்டும். வீட்டு வன்முறைகளிலிருந்து பெண்களை விடுவிக்க வேண்டும் என்பவை குறித்து முக்கியமான கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன.

ad

ad