புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 பிப்., 2014

சிறிலங்காவுக்கு எதிராக பிரெஞ்சு மொழி பேசும் நாடுகளின் ஆதரவைத் திரட்டும் பொறுப்பு பிரான்சிடம் ஒப்படைப்பு

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்துக்கு, பிரெஞ்சு மொழி பேசும் நாடுகளின் ஆதரவைத் திரட்டும் பொறுப்பு பிரான்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கும் பிரித்தானியாவே, பிரெஞ்சு மொழி பேசும் நாடுகளின் ஆதரவைத் திரட்டித் தருமாறு பிரான்சிடம் கேட்டுள்ளது.

அதேவேளை, கொமன்வெல்த் அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் ஆதரவைத் திரட்டும் முயற்சியில் பிரித்தானியா ஈடுபட்டுள்ளது.

இதற்கிடையே, பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியகத்தில், சிறிலங்கா விவகாரங்களைக் கையாளும் அதிகாரியான விக்கி மொரேலி இந்தவாரம் கொழும்புக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் குறித்து அவர் பல்வேறு தரப்புகளுடனும் கலந்துரையாடல்களை நடத்துவார் என்று தெரியவருகிறது. 

ad

ad