செவ்வாய், பிப்ரவரி 18, 2014

துரைமுருகனுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும்: திமுகவுக்கு ஆதரவாக தேமுதிக குரல்
சட்டசபையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும் திமுக உறுப்பினர்கள் எழுந்து, மு.க.ஸ்டாலின், துரைமுருகன் மீதான உரிமை மீறல் பிரச்சனையில் எடுக்கப்பட்ட நடவடிக்
கை குறித்து பேச முயன்றனர்.

ஆனால், அவர்களுக்கு சபாநாயகர் தனபால் அனுமதி மறுத்தார். அவை முன்னவர் ஓ.பன்னீர் செல்வமும், அது முடிந்து போன விவகாரம். அதுபற்றி பேச விதிகளில் இடமில்லை என்றார். 
தொடர்ந்து திமுக உறுப்பினர்கள் சபாநாயகரிடம் பேச அனுமதி கேட்டு கோஷம் எழுப்பினர். அவர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். 
இதன்பின்னர் தேமுதிக கொறடா சந்திரகுமார், திமுக உறுப்பினர் துரைமுருகன் என்று பேச ஆரம்பித்தார். அதற்கு சபாநாயகர் தனபால், இதுபற்றி பேச அனுமதி கிடையாது என்றார். கோரிக்கைதான் வைக்கிறேன் என்றார் சந்திரகுமார். இதற்கு சபாநாயகர் தனபால், இந்த அவையில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்ட பிரச்சனை பற்றி அவையில் மீண்டும் பேச விதிகளில் இடமில்லை என்றார்.
துரைமுருகனுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்றுதான் கேட்கிறோம். வேறு எதுவும் கேட்கவில்லை என்று கூறிய சந்திரகுமார், தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பேசினார்