புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 பிப்., 2014

பிரித்தானிய தம்பதி கடத்தல் விவகாரம்: சென்னையில் தீவிர விசாரணையில் ஈடுபடும் லண்டன் பொலிஸார்
இலங்கையைச் சேர்ந்த பிரித்தானிய கணவன் மற்றும் மனைவி கடந்த வருடம் தமிழகத்தில் வைத்து கடத்தப்பட்ட சம்பவத்துடன் இருக்கும் தொடர்புகள் குறித்து லண்டன் ஸ்கெட்லேன்ட் யார்ட் பொலிஸார், சென்னை பொலிஸ் ஆணையாளருடன் கலந்துரையாடியுள்ளனர்.

இந்த பிரித்தானிய பிரஜைகள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஸ்கொட்லேண்ட் யார்ட் பொலிஸின் ஆட்கடத்தல் மற்றும் விசேட விசாரணை பிரிவின் அதிகாரிகளான கிரிக் மெக்கி மற்றும் மார்க் ஹியூக்ஸ் ஆகியோர் சென்னை பொலிஸ் ஆணையாளர் எஸ்.ஜோர்ஜை சந்தித்து சம்பவம் குறித்து நடைபெற்று வரும் விசாரணைகள் தொடர்பான ஆவணங்கள் மற்றும் சாட்சியங்களை லண்டனில் நடைபெறும் விசாரணைகளுக்காக பெற்றுக்கொண்டுள்ளனர்.
இதன் போது பிரித்தானியாவின் தேசிய குற்றவியல் முகவர் அமைப்பின் சஞ்சய் மைனி, டெல்லியில் உள்ள பிரித்தானிய தூதரகத்தின் பிரதிநிதியும் இதன் போது உடனிருந்துள்ளனர்.
2.58 கோடி ரூபா கப்பம் கேட்டு இலங்கை வம்சாவளியான கணவன் மற்றும் மனைவி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கை பிரஜை உட்பட 9 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் ஒருவரை லண்டன் பொலிஸார் கைது செய்திருந்ததுடன் அவர் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் நீதிமன்ற விசாரணைகளை அவர் எதிர்நோக்கியுள்ளார்.
இந்த கடத்தல் சம்பவம் தொடர்பில் சென்னை பொலிஸாரும் ஸ்கெட்லேண்ட் யார்ட் பொலிஸாரும் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
தமிழகத்தில் கடத்தப்பட்ட பிரித்தானிய பிரஜைகள் கூடலூர் மந்தாரகுப்பம் பகுதியில் வைத்து மீட்கப்பட்டனர்.
2013 மே மாதம் 29 ஆம் திகதி 59 வயதான தவராஜா அவரது மனைவியான 55 வயதான சலஜா ஆகியோர் கொழும்பில் இருந்து சென்னை சென்றிருந்த நிலையில், விமான நிலையத்திற்கு அருகில் வைத்து காணாமல் போயினர்.
இனந்தெரியாத நபர் ஒருவர் லண்டனில் உள்ள இவர்களின் மகளிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பெற்றோரை விடுவிக்க 3 லட்சம் பவுண்களை கப்பமாக கோரியிருந்தனர்.

ad

ad