புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 பிப்., 2014

கந்தசாமி கமலேந்திரன் ஈபிடிபி கட்சியில் இருந்து அதிரடி நீக்கம்
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அங்கத்துவத்தில் இருந்து வட மாகாண சபை உறுப்பினரும் எதிர்கட்சித் தலைவருமாகிய கந்தசாமி கமலேந்திரன் நீக்கப்பட்டுள்ளார்.16.01.2014ம் திகதி கட்சியின் மத்தியக் குழுக் கூட்டத்தில், ஏற்கனவே கட்சில் இருந்து இடைநிறுத்தப்பட்ட முடிவிற்கு அமைய அவர் கட்சியில் இருந்து உடன் அமுலிற்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் நிர்வாகச் செயலாளரினால் யாழ். சிறைச்சாலை அத்தியட்சகர் ஊடாக கமலேந்திரனுக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

29-01-2014 என்று திகதியிட்டு ஈபிடிபி நிர்வாக செயலாளரால் குறித்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும், முன்னாள் நெடுந்தீவு பிரதேச சபையின் தலைவருமான டானியல் ரெக்ஷியன் என்பவரை கொலை செய்ததாகக் குற்றம் சுமத்தி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் கமலேந்திரன் விளக்கமறியலில் வைக்கப்படடுள்ளார்.

இக்கொலை குறித்த பொலிஸ் விசாரணை, ஊடக தகவல்கள் என்பவற்றை கடந்த 16ம் திகதி ஆராய்ந்த கட்சியின் மத்திய செயற்குழு கமலேந்திரனை கட்சியில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளது.

கமலேந்திரன் மற்றும் அவரது ஆதரவாளர் ஆகியோரிடம் இருந்து பொலிஸார் மீட்ட சட்டவிரோத துப்பாக்கி குறித்தும் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது.

கமலேந்திரன் மீது சுமத்தப்பட்டுள்ள கொலைக் குற்றச்சாட்டினால் ஈபிடிபி கட்சி, தலைமை, அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள், அபிமானிகள் யாவருக்கும் எற்பட்டுள்ள அசௌகரியங்களையும் அவமானங்களையும் களையக்கூடிய வகையில் கமலேந்திரன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஈபிடிபி தெரிவித்துள்ளது.

ad

ad