புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 பிப்., 2014

இலங்கை தமிழ் ஊடகவியலாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தெரிவு

கொழும்பில் நேற்று நடந்த இலங்கை தமிழ் ஊடகவியலாளர்கள் சங்கத்தின் ஆண்டுப் பொதுக்கூட்டத்தில், புதிய நிர்வாகசபை தெரிவு செய்யப்பட்டுள்ளது. 

கொழும்பு தமிழ் சங்கத்தில் நேற்றுக் காலை, இலங்கை தமிழ் ஊடகவியலாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவரும் சிலோன் டுடே பத்திரிகையின் செய்தி ஆசிரியருமான அனந்தபாலகிட்னர் தலைமையில் சங்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில், சங்கத்தின் புதிய நிர்வாகசபைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களின் விபரம் வருமாறு.

தலைவர் - ஏ.என்.எஸ்.திருச்செல்வம், (பிராந்திய ஊடகவியலாளர்)
செயலாளர் - கே.ஜெயந்திரன், (பிரதி ஆசிரியர் - சிறப்பம்சங்கள், தினக்குரல்)
பொருளாளர் - வஸ்தியாம்பிள்ளை ஜோன்சன்  (மித்திரன் ஆசிரியர்)
 உப தலைவர்கள்  - செ.பேரின்பராஜா, (பிராந்திய செய்தியாளர்) , எஸ். தில்லைநாதன் (பிராந்திய செய்தியாளர்)
உப செயலாளர்கள் - மு. செல்வராஜா (பிராந்திய செய்தியாளர்), கேசாயினி எட்மன்ட் (ஊடகவியலாளர், யங் ஏசியா தொலைக்காட்சி)
உப பொருளாளர்  -  அ.சஞ்ஜித் ( சுதந்திர ஊடகவியலாளர்),

செயற்குழு உறுப்பினர்கள் -  ஆர்.பாரதி, (வாரவெளியீடு ஆசிரியர் , தினக்குரல்), எஸ்.ஸ்ரீகஜன் - (பிரதம ஆசிரியர், வீரகேசரி), அனந்தபாலகிட்னர்- ( செய்தி ஆசிரியர், சிலோன் டுடே) அ. நிச்ஸன், (மூத்த ஊடகவியலாளர்), அ.பொன்னம்பலம் (பிராந்திய செய்தியாளர்) , கே.எஸ்.சிவகுமாரன் (மூத்த எழுத்தாளர், பெ.மதுசூதனன் (மூத்த எழுத்தாளர்), ஏ.லிவியன் சிவசண்முகநாதன், (சுதந்திர ஊடகவியலாளர்) , த.பிரதீபன் (பிராந்திய செய்தியாளர்), எஸ்.சண்முகராஜா, (மூத்த ஊடகவியலாளர்), ஆர்.சேதுராமன்  (ஆசிரியர், மெட்ரோ நியூஸ்), எஸ். மோசஸ் (ஊடகவியலாளர், ரூபவாகினி).

இலங்கையில் தமிழ் ஊடகவியலின் தரத்தை உயர்த்துவதற்கும், தமிழ் ஊடகவியலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும், அவர்களின் பாதுகாப்பு மற்றும் கருத்து சுதந்திரம் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்கும், அனைத்துலக ஊடகவியலாளர்கள் அமைப்புக்கள் மற்றும் புலம்பெயர் தமிழ் மக்களுடன் ஒன்றிணைந்து செயற்திட்டங்களை முன்னெடுக்க வேண்டியதன் அவசியம் இந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ad

ad