புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 பிப்., 2014


காதலர் தினம் : காதல் திருமணம் செய்த இளம்ஜோடி தற்கொலை
சிவகங்கையை சேர்ந்தவர் முத்துக்காளை. இவரது மகன் ராஜா (வயது 22). இவரது உறவினரான மதுரையைச் சேர்ந்தவர் விஜயன். இவரது மகள் தீபா(வயது-18). இவர் ராஜாவுக்கு அத்தை மகள் உறவு முறை ஆகிறது.



நெருங்கிய உறவினர்களான ராஜா, தீபா இருவரும் அடிக்கடி சந்திக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. இந்த சந்திப்பு வயது கூடும்போது இருவருக்கும் இடையில் இது நாளடைவில் காதலாக மாறியது.


காதலர்கள் வெளியிடங்களில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்தனர். இந்த விவகாரம் இருவீட்டா ருக்கும் தெரிய வந்தது. பொருளாதார வசதியில் இரண்டு குடும்பத்துக்கும் கொஞ்சம் வித்தியாசம் இருந்ததால், இரண்டு தரப்பினரும் இந்த காதலை ஏற்றுக்கொள்ளவில்லை.


நெருங்கிய உறவினர்களுக்குள் திருமணம் செய்தால் தம்பதிகளுக்கு பிறக்கும் குழந்தைகள் குறைபாடுடன் பிறக்கும் எனக்கூறி காதல் ஜோடியை பிரித்தனர். உறவினராக இருந்தாலும் பெற்றோர் ஒத்துக் கொள்ளாததால் காதலர்கள் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறினர்.


பின்னர் நண்பர்கள் முன்னிலையில் ராஜாவும், தீபாவும் கோவிலில் திருமணம் செய்து கொண்டதுடம், மதுரையில் இருந்தால் உறவினர்கள் தங்களை பிரித்துவிடுவார்கள் என்று பயந்துகொண்டு கோவைக்கு வந்தனர்.

கோவையில் இருந்த ராஜாவின் நண்பர்கள் மூலமாக  பல்லடம் அருகே உள்ள சுல்தான் பேட்டை என்ற இடத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்களது திருமண வாழ்க்கையை ராஜ–தீபா ஜோடியினர் துவங்கினர். அருகிலுள்ள ஒரு தனியார் கோழிப் பண்ணையில் இரண்டு பேரும் வேலைக்கு சேர்ந்தனர். தினமும் காலை வேலைக்கு சென்று மாலையில் ஓன்று சேர வீடு திரும்பி வந்தார்.

இந்நிலையில் காதல் ஜோடியை அவர்களது உறவினர்கள் பல இடங்களில் தேடி வந்தனர். அப்போது கோவையில் ராஜா அவரது நன்பர்கள் உதவியுடன் தங்கியிருப்பது இருவீட்டாருக்கும் தெரிய வந்தது.
மதுரையிலிருந்து இரு வீட்டாரும் மணமக்களை பிடிக்கும் நோக்கத்தில் கோவைக்கு கிளம்பிவரும் தகவல் ராஜாவின் நண்பர்கள் மூலம் ராஜாவுக்கு தெரிய வந்தது.


இனி நம்மை சேர்ந்து வாழ விடமாட்டார்கள் என்று பயந்த ராஜாவும், தீபாவும் கோழிப்பண்ணையில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்துவிட்டனர். சில மணி நேரங்களில், இருவர் வாயிலும் நுரை தள்ளி மயங்கி விழுந்தனர்.


இதைப்பார்த்த அங்கு வேலை பார்த்து கொண்டிருந்த மற்ற ஊழியர்கள் மயங்கி கிடந்த இருவரையும் தூக்கிக்கொண்டுபோய் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.


டாக்டர்கள் ராஜா-தீபா இருவருக்கும் தீவிர சிகிச்சையளித்தனர். ஆனாலும், சிகிச்சை பலனின்றி ராஜாவும், தீபாவும் என்று மாலை பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து பேரூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ராஜா-தீபா காதல் ஜோடி திருமணம் செய்து 15 நாட்களே ஆனதால் இதுகுரித்து கோட்டாசியர் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ad

ad