புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 பிப்., 2014

தமிழக அரசின் முடிவு: மக்களவையில் திமுக - அதிமுக வாக்குவாதம்

மிழக சிறையில் உள்ள ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்வது தொடர்பாக மக்களவையில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் இடையே
புதன்கிழமை வாக்குவாதம் ஏற்பட்டது.
மக்களவை இரு முறை ஒத்திவைக்கப்பட்ட பிறகு பிற்பகல் 2 மணிக்கு கூடியதும் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்பட ஏழு பேரை விடுவிக்க தமிழக அமைச்சரவை தீர்மானித்தது தொடர்பாக நாடாளுமன்றத் திமுக குழுத் தலைவர் டி.ஆர். பாலு பேச மக்களவைத் தலைவர் மீரா குமார் அனுமதித்தார்.
அப்போது பேசிய பாலு "மூவரையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை தீர்மானித்துள்ளது. ஆனால், இந்த விஷயத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே குறுக்கிட்ட அதிமுக குழுத் தலைவர் தம்பிதுரை "ஏழு பேரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை முடிவு எடுத்து விட்டது. அதை ஏன் மக்களவையில் பாலு எழுப்புகிறார்?' என்றார்.
இதையடுத்து, பாலு "எனது நிலையை விளக்கி நான் பேசுகிறேன். அதனால், உங்களுக்கு என்ன பிரச்னை? முதலில் இருக்கையில் அமருங்கள். நான் பேசும் போது குறுக்கிடாதீர்கள்' என்றார்.
இருப்பினும் இந்த விவகாரத்தை டி.ஆர். பாலு எழுப்ப அதிமுக உறுப்பினர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர். "அதிமுக அரசுதான் ஏழு பேரையும் விடுவிக்க முடிவு செய்தது' என்று அவர்கள் குரல் கொடுத்தனர்.
இதையடுத்து, மக்களவைத் தலைவர் தலையிட்டு பாலுவிடம் "உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்' என்றார்.
இதையடுத்து பேசிய பாலு, "தமிழக அமைச்சரவை புதன்கிழமை கூடி ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை குறைக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்பட ஏழு பேரை சிறையில் இருந்து விடுவிக்க முடிவு செய்துள்ளது. அதற்கு ஏதுவாக மத்திய அரசு ஒப்புதல் தெரிவிக்கும்படி தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அதன் மீது விரைவில் மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும். இக் கோரிக்கையை வலியுறுத்தி திமுக தலைவர் கருணாநிதியும், மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்' என்றார்.
அப்போது மீண்டும் குறிக்கிட்ட தம்பிதுரை "தமிழக முதல்வர் ஜெயலலிதாதான் ஏழு பேரையும் விடுதலை செய்ய தீர்மானித்து விட்டாரே. அதன் பிறகு ஏன் கருணாநிதியின் சார்பில் இக் கோரிக்கையை பாலு வைக்கிறார்? இந்த விவகாரத்தில் தமிழக அரசு முடிவு செய்து தீர்மானத்தையும் நிறைவேற்றியுள்ளது. அதன் நகல் மத்திய அரசுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஏழு பேரையும் விடுதலை செய்வது என்பது தமிழக முதல்வர் எடுத்த முடிவாகும். அதை அவர் செயல்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்' என்றார்.
இதையடுத்து, அவையில் நிலவிய கூச்சல் குழப்பத்தை மீரா குமார் தலையிட்டு தீர்த்து வைத்தார்.

ad

ad