புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 பிப்., 2014

 இலங்கை அரசு கடந்த காலங்களில் சர்வதேச மனித உரிமைகளை மீறியமை மற்றும் மனிதாபிமான 
சட்டங்களை மீறியமை தொடர்பாக சுதந்திரமானதும் நேர்மையுமான விசாரணைகளை நடத்துவதற்குத் 
தவறிவிட்டதாக நவனீதம்பிள்ளை அறிக்கை
உள்நாட்டு விசாரணைகள் கண்டறியத் தவறிய உண்மைகளை கண்டறியும் வகையில், சுதந்திரமான சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்று உருவாக்கப்படவேண்டும். அதற்குத்
தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்க ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் தயார்.2006 இல் திருகோணமலையில் 5 மாணவர்கள் படுகொலை, மூதூரில் 17 தொண்டுப்பணியாளர்கள் 
படுகொலை உள்ளிட்ட போர்க் குற்றங்கள் குறித்த, பொறுப்புக்கூறும் விசாரணைகளில் பெரியளவில் எந்த முன்னேற்றமும் எட்டப்படவில்லை.இறுதியாக வெளியிடப்பட்ட ஐ.நா. மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் அறிக்கையில் இலங்கை அரசால் மீள்கட்டமைப்பு மற்றும் கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட சில பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தியமை தொடர்பாகத் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இலங்கை அரசு கடந்த காலங்களில் சர்வதேச மனித உரிமைகளை மீறியமை மற்றும் மனிதாபிமான 
சட்டங்களை மீறியமை தொடர்பாக சுதந்திரமானதும் நேர்மையுமான விசாரணைகளை நடத்துவதற்குத் 
தவறிவிட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 துணை ஆயுதக்குழுத் தலைவர்களான டக்ளஸ்தேவானந்தா, கருணா ,பிள்ளையான் மீது மோசமான குற்றச்சாட்டுகள் உள்ள போதிலும், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும்  இல்லை. இலங்கை இராணுவத்தினர், விடுதலைப் புலிகளால் இழைக்கப்பட்ட போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்.
மேலும் இந்த  அறிக்கையில் சிறுபான்மை இனத்தவர்களின் வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள், மனித உரிமை ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள், சட்டவாளர்கள் எனப் பலரும் துன்புறுத்தல் களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றமை தொடர்பாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இலங்கை அரசு மனித உரிமை கள் ஆணையாளரால் வழங்கப்பட விருப்பதாகத் தெரிவித்த தொழில்நுட்ப 
உதவிகளைப் பெறுவதிலும் அக்கறை காட்டவில்லை.இந்த நிலையில் இறுதிப் போரின்போது நிகழ்த்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றங்கள் தொடர்பான புதிய ஆதாரங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் சுதந்திரமான, சர்வதேச விசாரணை ஒன்று இடம்பெற வேண்டுமென ஆணையாளர் பரிந்துரை செய்துள்ளார். 
அத்துடன் கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருக்கும் 
விடயங்களை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறும், ஐ.நா.மனித உரிமைகள் சபையின் ஆணையாளரின் 
அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட விடயங்களில் அக்கறை செலுத்துவதுடன் அவை தொடர்பாக நீதியான விசாரணை 
நடத்துமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
மேலும் சகல இலங்கைப் பிரசைகளுக்கும் நீதி, நியாயம், உத்தரவாதம் என்பன சமமாகக் கிடைக்கக் கூடிய 
வகையில் இலங்கை அரசு பார்த்துக் கொள்ள வேண்டும் என வு ம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசின் அழைப்பின் பேரில் மனித உரிமைகள் ஆணையாளர் கடந்த ஓகஸ்ட் மாதம் 25 ஆம் திகதியிலிருந்து 31 ஆம் திகதிவரை இலங்கையில் தங்கியிருந்து நிலைவரங்களை ஆராய்ந்துள்ளார்.இதன்போது பொதுமக்களின் வதிவிடங்களிலிருந்து படையினரின் பிரசன்னத்தை இல்லாதொழிப்பதற்குக் காலக்கெடு ஒன்று  விதிக்கப்பட வேண்டுமென ஆணையாளர் கருத்து வெளியிட்டார். ஆனால் இதுவரை எதுவுமே நடைபெறவில்லை.
மேலும் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல் சம்பவங்கள் தொடர்பாக அந்த அறிக்கையில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இதில் கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி கொழும்பின் சிறிய 
புறநகர்ப் பகுதியான வெலிவேரியாவில் நிராயுதபாணிகளாகத் தமது குடிதண்ணீர் மாசு அடைவது தொடர்பான கோரிக்கையை வலியுறுத்துவதற்காகத் திரண்ட சுமார் 6,000 குடியிருப்பாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்றுபேர் உயிரிழந்ததுடன் வேறு பலர் மோசமான காயங்களுக்கு உள்ளானார்கள்.
இது தொடர்பாக இராணுவத் தளபதியால் நியமிக்கப்பட்ட இராணுவ நீதிமன்றம் விசாரணைகளை மேற்கொண்டது. விசாரணைகளின் பின்னர் அறிக்கையும் வெளியிடப்பட்டது. அத்துடன் நான்கு சிரேஷ்ட தரத்திலுள்ள படைவீரர்களை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவிகளிலிருந்து அகற்றியதாக படைத் தரப்பினரால் அறிவிக்கப்பட்டது.
ஆனால் இது தொடர்பாக நீதி விசாரணைகள் எதுவும் இடம்பெறவில்லை.
இந்த நிலையில் 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9 ஆம் திகதி வெலிக்கடைச் சிறைச்சாலையில் 
இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கும் பொருட்டு புனர்வாழ்வு மற்றும் 
சிறைச்சாலைகள் மறு சீரமைப்பு அமைச்சினால் குழுவொன்று நியமிக்கப்பட்டது.
வெலிக்கடைச் சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் ஆகக் குறைந்தது 27 பேர் கொல்லப்பட்டதாகவும் 43 
பேர் காயங்களுக்கு உள்ளானதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக ஆராய்ந்த குழு 2014 ஆம் ஆண்டு 15 ஆம் திகதி தனது அறிக்கையை அமைச்சரிடம் 
கையளித்தது. ஆனால் இந்த அறிக்கை பகிரங்கமாக வெளியிடப்பட வில்லை. ஆனால் ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டதன் பிரகாரம் விசாரணைக் குழுவினரின் அறிக்கையில் கைதிகள் தமக்குள் தாமே சுட்டுக்கொண்டு இறந்ததாகத் தெரிவிக்கப்பட்டதாக அறிய முடிகின்றது.மேலும் வவுனியா சிறையில் கைதிகளால் பிடித்து வைக்கப்பட்டிருந்த சிறைச்சாலை உத்தியோகத்தர்களை விடுவிக்கும் பொருட்டு படையினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போது கைதிகள் சிலர்  உயிரிழந்தமை தொடர்பாக விசாரணைகள் நடைபெறுவதாக அரச தரப்பால் மனித உரிமைகள் ஆணையாளரிடம் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இது வரை அது தொடர்பான அறிக்கைகள் வெளியிடப்படவில்லை.
மேலும் மாத்தளையில் புதைகுழி ஒன்று இருப்பது தொடர்பாகத் தெரிவிக்கப்பட்டது. மன்னாரிலும் புதைகுழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இதில் குழந்தைகளின் உடல் எச்சங்களும் மீட்கப்பட்டதாகத் தகவல்கள் 
தெரிவித்தன.
இந்த நிலையில் இந்தப் புதைகுழியில் காணப்படும் மனித எச்சங்கள் தமது காணாமற்போன உறவுகளுடையதாக இருக்கலாமென்ற ஏக்கமும் இங்குள்ள மக்களிடையே காணப்படுகின்றது.இது தொடர்பாக சர்வதேசத்தின் உதவியுடனான விசாரணைகள்  இடம்பெறுவதற்கு மனித உரிமைகள் 
ஆணையாளர் பரிந்துரை செய்துள்ளார். கடந்த 2012 ஆம் ஆண்டு மே மாதம் இலங்கையின் அமைச்சரவை கற்ற றிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கென ஜனாதிபதி செயலணி ஒன்றை நியமித்தது. அதே ஆண்டு ஜூலை மாதம்  ஜனாதிபதி  செயலணி நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளில் சிலவற்றை  நடைமுறைப்படுத்துவதற்கான தேசியத் திட்டம் ஒன்றையும் 
சமர்ப்பித்தது. 
இது  தொடர்பாகவும் மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் ஜனாதிபதியின் செயலாளருடன் கலந்துரையாடியுள்ளனர். மேலும் கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கஆணைக் குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட சில விடயங்கள் அமுல்படுத்தப்பட்டமையை ஆணையாளர் வரவேற்றுள்ளார்.இதில் தமிழ்  மொழிக்குரிய அந்தஸ்து  வழங்கப்பட்டமை, வடக்குக்  கிழக்கிலுள்ள பாடசாலைகள் 
தரமுயர்த்தப்பட்டமை உள்ளிட்ட விடயங்கள் அடங்கியுள்ளன. 
ஆனால்  நல்லிணக்க ஆணைக் குழுவினால் தெரிவிக்கப்பட்ட 285 பரிந்துரைகளில் 92ஐ மட்டுமே ஆரம்பத்தில் நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை  சுதந்திரமான, சர்வதேச விசாரணை ஒன்று இடம்பெற வேண்டுமென ஆணையாளர் பரிந்துரை செய்துள்ளார்.
அத்துடன் கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருக்கும் விடயங்களை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறும், ஐ.நா.மனித உரிமைகள் சபையின் ஆணையாளரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட விடயங்களில் அக்கறை செலுத்துவதுடன் அவை தொடர்பாக நீதியான விசாரணை நடத்துமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சகல இலங்கைப் பிரசைகளுக்கும் நீதி, நியாயம், உத்தரவாதம், என்பன சமமாகக் கிடைக்கக் கூடிய வகையில் இலங்கை அரசு பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை இலங்கையின் தற்போதைய நிலவரங்கள் தொடர்பாக நேற்று  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

18 பக்கங்கள் கொண்டுள்ளதான இந்த அறிக்கையின் முன்னுரையில், உள்நாட்டு விசாரணை பொறிமுறைகள் இலங்கையில் தோல்வியடைந்ததுள்ள நிலையில், சுதந்திரமான சர்வதேச விசாரணைக்கான பொறிமுறைக்கு பரிந்துரை செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகள் சில முன்னேற்றம் கண்டிருப்பதனை ஒத்துக் கொள்வதாகவும், எனினும் சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பில் சுதந்திரமான மற்றும் நம்பகமான விசாரணைகள் உறுதி செய்ய முடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமைச்சபையின் ஆணையாளர் அலுவலகம் பரிந்துரைத்த சிறப்பு பொறிமுறைகள் ஊடான தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்கு இலங்கை உரிய பதிலளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, வெளிவந்துள்ள புதிய ஆதாரங்கள் ஆயுத மோதல்களின் இறுதி கட்டங்களில் நடந்த நிகழ்வுகளை வெளிப்படத் தொடர்கிறது எனச் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் பத்திரிகைள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்கள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக உதயன் பத்திரிகையின் மீது ஜனவரி 10 ம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதல், ஏப்பிரல் 13 ம் திகதி பத்திரிகை அச்சிடும் இயந்திரங்கள் எரிக்கப்பட்டமை மற்றும் சண்டே லீடர் பத்திரிகை பத்திரிகை மீதான தாக்குதல்கள் ஆகியன சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இத் தாக்குதல்களுக்கு எதிராக அரசு அதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தவிர மன்னார் மற்றும் மாத்தளை மனித புதைகுழிகள், யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் காணாமல் போனோர் தொடர்பாக எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் பின்னணியில், சுதந்திரமான சர்வதேச விசாரணைப் பொறிமுறைக்கு ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் அலுவலகம் பரிந்துரைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையானது வரும் மனித உரிமைச்சபைக் கூட்டத் தொடரில் இலங்கை விவகாரத்தில் வலுவான அனைத்துலக விசாரணை நடத்த கோரும் தீர்மானத்துக்கு வழிகோல வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபை நம்பிக்கை தெரிவித்துள்ளது.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=531742678626363431#sthash.2kFbu4U1.dpuf

ad

ad