புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 பிப்., 2014

தமிழ் கூட்டமைப்பு பதவிப்பிரமாணத்திற்கு மாறாக செயற்படுகிறது

மார்ச் மாதத்தில் நடை பெறும் ஜெனீவா மனித உரிமைகள் உச்சிமாநாட்டை குறிபார்த்து இலங்கை யில் நடைபெற்ற யுத்தக்குற்றச்சாட்டுகள் குறித்து சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென்ற வடமாகாண சபையின் தீர்மானத்திற்கு ஆதரவளித்து வாக்களித்த தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினர் தாங்கள் எடுத்துக் கொண்ட பதவிப் பிரமாணத்திற்கு மாறான முறையில் செயற்பட்டிருப்பதாக வடமாகாண சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர
முன்னணியின் உறுப்பினரான அங்கஜன் இராமநாதன் விடுத்துள்ள அறிக்கையில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இவர் இப்பதவியுடன் யாழ் மாவட்ட சுதந்திர கட்சியின் பிரதம அமைப்பாளராகவும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. தான் இந்த பிரேரணையை எதிர்த்ததுடன் அதனை நிராகரித்ததாக இவ்வறிக்கையில் கூறுகிறார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சார்ந்த உறுப்பினர்கள் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்படுவதை முழுமையாக எதிர்த்ததாக கூறும் அங்கஜன் இராமநாதன், எதிர்க்கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் எவரும் இந்த பிரேரணையை ஆதரித்து வாக்களிக்காத போதிலும் இப்பிரேரணை ஏக மனதாக நிறைவேற்றப்பட்டதாக பொய்யான தகவல்கள் ஊடகங்கள் மூலம் வெளியிடப்படுவதாக அவர் கண்டனம் தெரிவித்தார்.
இந்த பிரரேணை எக்காரணத்திலும் இந்நாட்டு மக்களுக்கு குறிப்பாக வடபகுதி மக்களுக்கு நன்மையை ஏற்படுத்தாது என்று தெரிவிக்கும் அவர், வடமாகாண மக்கள் தங்கள் பிரதேசத்தில் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்துச் செல்வதற்காக கடந்த மாகாணசபைத் தேர்தலில் வாக்களித்தார்கள் என்றும் அதைவிடுத்து இன ரீதியிலான அரசியல் நடத்த மக்கள் வாக்களிக்கவில்லை என்றும் அங்கஜன் இராமநாதன் மேலும் சுட்டிக்காட்டினார்.
இலங்கை மக்கள் தங்கள் பிரச்சினையை உள்ளூரில் ஏற்படுத்தப்படும் தீர்வுகள் மூலம் தீர்த்துக்கொள்ள முடியும் என்பதில் எமக்கு பூரண நம்பிக்கை இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
எனவே, வடமாகாணசபை உறுப்பினர்கள் எமது பிரச்சினையை வெளிநாடுகளுக்கு எடுத்துச் சென்று குரல் எழுப்புவதன் மூலம் அது எங்களுக்கு தீங்காக அமையுமென்று அவர் கூறியுள்ளார்.

ad

ad