புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 பிப்., 2014

ஜெனிவாவில் இலங்கைக்கு உதவ இந்தியா மறுப்பு - எக்கொனமிக் ரைம்ஸ்
ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தை தோற்கடிக்க எந்த வகையிலும் உதவ முடியாது என்று இந்தியா கைவிரித்து விட்டதாக எக்கொனமிக் ரைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது
இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதாலேயே, தமிழர்களின் உணர்வுகளைக் காயப்படுத்த விரும்பாக இந்திய மத்திய அரசு இலங்கைக்கு உதவ மறுத்துள்ளது.

கடந்த புதன்கிழமை புதுடெல்லியில், இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்தை, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் சந்தித்துப் பேசியிருந்தார்.
இதன்போது, ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தில், அனைத்துலக விசாரணை கோரப்படாது என்பதை உறுதிப்படுத்துவதற்கு மன்மோகன் சிங் அரசாங்கம் உதவ வேண்டும் என்று பீரிஸ் கோரியிருந்தார் என்று இந்திய வெளிவகார அமைச்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தேர்தல் மனோநிலையில் இருந்த சல்மான் குர்ஷித் இதற்கு எந்த வாக்குறுதியையும் கொடுக்கவில்லை என்று இந்திய வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அதேவேளை, வொசிங்டனுடனேயே இதுபற்றி நேரடியாகப் பேசிக் கொள்ளுமாறு  இலங்கை வெளிவிவகார அமைச்சர் பீரிசுக்கு, சல்மான் குர்ஷித் ஆலோசனை கூறியுள்ளார்.
இந்த தீர்மானம் தொடர்பாக புதுடெல்லி சரியான நேரத்தில் முடிவெடுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி இன்னமும் தமிழ்நாட்டில் எந்தக் கூட்டணியையும் அமைக்கவில்லை.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது தமிழ்மக்களுக்கு இழைக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்படும் நிலையில், இந்த நேரத்தில் கொழும்புக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தால், தமிழ்நாட்டில் உணர்வுபூர்வமான விவகாரமான இது, அங்கு கூட்டணி அமைப்பதில் சிக்கலை ஏற்படுத்தும் என்பதாலேயே இலங்கையுடன் மோதல் போக்கை கடைப்பிடிப்பதாகவும் எக்கொனமிக் ரைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

அதேவேளை, சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில் இலங்கையுடன் கூட்டாளியாக இருப்பதற்கும் இந்தியா விரும்புவதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

ad

ad