புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 பிப்., 2014

திருப்பதியில் தரிசனம் பெறும் ஜனாதிபதியின் பாரியார்
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பாரியார் சிராந்தி ராஜபக்ஷ திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று வழிப்பாடுகளில் ஈடுபட்டதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிராந்தி ராஜபக்ஷ நேற்று மாலை 4 மணிக்கு திருமலைக்கு சென்றார்.

திருமலையில் ஸ்ரீ கிருஷ்ணா விருந்தினர் மாளிகையில் தங்கிய அவர், 5 மணிக்கு திருமலையில் உள்ள ஆந்திர மாநில கைவினை பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை மையமான லேப்பாக்சிக்கு சென்று இந்திய கலாச்சார உடையான புடவைகள் உள்ளிட்ட பொருட்களை வாங்கினார். இதனால், அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
அவர் கடைக்குள் இருக்கும் வரை வேறு வாடிக்கையாளர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. அவர் தங்கியுள்ள விருந்தினர் மாளிகைக்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சிராந்தி இன்று அதிகாலை நடைபெற்ற சுப்ரபாத சேவையில் தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான அதிகாரிகள் செய்துள்ளனர். இவருடன் 33 பேர் வந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ad

ad