புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 பிப்., 2014

மிக இறுக்கமான வெளியுறவுக் கொள்கையை வலியுறுத்தியுள்ள சுவிஸ் தேர்தல் முடிவுகள்:ஐரோப்பிய யூனியன் அதிர்ச்சி

சுவிட்சர்லாந்தில் நடந்து முடிந்துள்ள தேர்தல் முடிவுகள் அந்நாட்டில் மிக இறுக்கமான வெளியுறவுக் கொள்கையை உருவாக்க வழி வகுத்துள்ளதுடன் அந்நாட்டின் மிகப் பெரிய வர்த்தக பங்குதாரர் ஆன ஐரோப்பிய யூனியனுக்கு (EU) ஆத்திரத்தையும் விளைவித்துள்ளது.
இன்று நடந்து முடிந்துள்ள தேர்தல் முடிவுகளின் படி 50.3% வீதமான வாக்குகள் வலதுசாரிக் கட்சிக்கு ஆதரவாகவும் சுவிட்சர்லாந்தின் குடிவரவுக் கொள்கைகளை மேலும் பரிசீலித்து இறுக்கமான சட்ட திட்டங்களுடன் அமைப்பதற்கும் அதிகாரம் அளித்துள்ளன.
எதிர்வரும் 3 வருடங்களுக்குள் தனது நாட்டிலுள்ள வெளிநாட்டு ஊழியர்கள் மீது புதிய கட்டுப்பாடுகளை விதிக்கும் விதத்தில் சுவிட்சர்லாந்தில் உள்ள 26 மாநிலங்களில் அரைவாசிக்கும் அதிகமான மாநிலங்களில் வலதுசாரிக் கட்சியின் மும்மொழிவுக்கு ஆதரவாக மக்களின் வாக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.
சுவிட்சர்லாந்தில் 1999 ஆம் ஆண்டு ஐரோப்பிய யூனியனுடன் நிறைவேற்றப் பட்ட வர்த்தக ஓப்பந்தத்தை அடுத்து கடந்த 10 வருடங்களாக ஒவ்வொரு வருடமும் சுமார் 64 000 ஐரோப்பிய யூனியன் குடிமக்கள் வேலை நிமித்தமாக சுவிட்சர்லாந்துக்கு குடிபெயர்ந்து இருப்பதாக சுவிஸ் குடிவரவுப் பிரிவின் மத்திய அலுவலகம் கூறுகின்றது.
இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளின் படி சட்ட மாற்றம் ஏற்பட்டால் ஐரோப்பிய யூனியனில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகளுக்கும் சுவிட்சர்லாந்துக்கும் இடையே உள்ள திறந்த குடியகழ்வுக் கொள்கைக்கான கதவு மூடப்பட்டு அவை தமது குடியகழ்வுக் கொள்கைகளை மறு பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.
இது சுவிட்சர்லாந்துக்கும் ஐரோப்பிய யூனியனுக்கும் இடையிலுள்ள உறவினை மட்டும் பாதிப்பதோடு அல்லாமல் ஒவ்வொரு வருடமும் சுவிட்சர்லாந்தில் அகதி அந்தஸ்து கோரி வரும் மக்களையும் பெருமளவு பாதிக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 25 நாடுகள் ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் போதும் ஐரோப்பாவின் மத்தியில் உள்ள நாடான சுவிட்சர்லாந்து இதில் இதுவரை அங்கம் வகிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad