புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 மார்., 2014

மலேசிய ’பார்முலா ஒன்’: சாம்பியன் பட்டம் வென்றார் ஹாமில்டன்

கார் பந்தயங்களில் மிகவும் பிரபலமான ‘பார்முலா1’ கார்பந்தயம் இந்த ஆண்டில் உலகம் முழுவதும் 19 சுற்றுகளாக நடத்தப்படுகிறது.

மலேசிய கிராண்ட் பிரீ பார்முலா 1 கார் பந்தயத்தில் மெர்சிடிஸ் அணி வீரர் லூயிஸ் ஹாமில்டன் சாம்பியன் பட்டம் வென்றார். 310.408 கிலோ மீற்றர் தூரம் கொண்ட இந்த பந்தயம் 56 சுற்றுகளை கொண்டது.
இந்த தொடரின் 2வது சுற்றான மலேசிய கிராண்ட்பிரீ போட்டி செபாங் சர்வதேச ஓடுதளத்தில் நேற்று நடந்தது. வழக்கம் போல் 11 அணிகளை சேர்ந்த 22 வீரர்கள் மிக வேகத்தில் காரை செலுத்தினார்கள்.
இதில் ஹாமில்டன் 56 சுற்றுகளை ஒரு மணி, 40 நிமிடம், 25.974 விநாடியில் கடந்து முதலிடம் பிடித்தார். 2008ம் ஆண்டு உலக சாம்பியனான ஹாமில்டன், மலேசிய போட்டியில் தனது முதல் வெற்றியை 8வது முயற்சியில் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
சக மெர்சிடிஸ் வீரர் நிகோ ராஸ்பெர்க் (+17.3 விநாடி) இரண்டாவதாக வந்தார். ரெட் புல் ரேசிங் ரெனால்ட் அணியின் நடப்பு உலக சாம்பியன் செபாஸ்டியன் வெட்டல் (+24.5) மூன்றாவது இடம், பெர்ராரி அணி நட்சத்திர வீரர் பெர்னாண்டோ அலான்சோ (+35.9) நான்காவது இடம் பிடித்தனர்.
போர்ஸ் இந்தியா மெர்சிடிஸ் அணி வீரர் நிகோ ஹல்கன்பர்க் (+47.1) ஐந்தாவது இடம் பிடித்தார். தொடரின் 3வது சுற்றான பக்ரைன் கிராண்ட்பிரீ வருகிற 6ம் திகதி நடைபெறுகிறது.

ad

ad